திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தமிழில் வெளுத்து வாங்கும் 6 இசையமைப்பாளர்கள்.. இதுல நம்பர் ஒன் இந்த சிங்கக்குட்டி தான்

சாதாரணமாக ஒரு படத்தில் திரைக்கதை, நடிகர், நடிகைகள், ஆக்சன் காட்சிகள் எவ்வளவு முக்கியமோ அதை காட்டிலும் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தான் சில சமயங்களில் படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது. அப்படி பாடல்களுக்காகவே வெற்றி பெற்ற படங்களும் உண்டு. ஒரு காலகட்டத்தில் இளையராஜா, ஏஆர் ரகுமான் பாடல்கள் தான் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்போது இவர்களை ஓரம் கட்டி அடுத்த தலைமுறையினர் பட்டையை கிளப்பி வருகிறார்கள்.

6. சாம் சி எஸ் : பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் சாம் சி எஸ். கைதி, விக்ரம் வேதா, ராக்கெட்ரி நம்பி விளைவு போன்ற படங்களில் இவர் அற்புதமாக இசையமைத்து இருந்தார். 2022-ல் ரசிகர்கள் கொண்டாடும் இசையமைப்பாளர்களில் சாம் சி எஸ் இடம்பெற்றுள்ளார்.

Also Read : கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த மாதரி நடிக்க மாட்டேன்.. அதிரடி காட்டிய ஜிவி பிரகாஷ்

5.ஜிப்ரான் : அஜித்தின் வலிமை படத்திற்கு ஜிப்ரான் பிஜிஎம் போட்டு இருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பின் காரணமாக துணிவு படத்திற்கும் ஜிப்ரான் இசையமைப்பாளராக பணியாற்றினார். இந்த படத்தில் இடம்பெற்ற சில்லா சில்லா முதல் எல்லா பாடல்களுமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்போது தமிழில் பகைவனுக்கு அருள்வாய் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்

4. தமன் : தமிழ் படங்களை காட்டிலும் தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருபவர் இசையமைப்பாளர் தமன். சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்கு தமன் தான் இசையமைத்திருந்தார். தளபதி விஜய் உடன் முதல் முறையாக வாரிசு படத்தில் தமன் கூட்டணி போட்டிருந்தார். இதில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல் வேற லெவலில் ட்ரெண்டானது. இப்போது ஷங்கர், ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

Also Read : பாட்டு மட்டும் இல்ல போஸ்டரும் காப்பி தான்.. தமன் வெளியிட்ட போஸ்டரால் ரத்தகளரியான சோசியல் மீடியா

3. யுவன் சங்கர் ராஜா : யுவனுக்கு தமிழ் சினிமாவை பொருத்தவரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் அஜித் படத்தில் இவருடைய பிஜிஎம் வேற லெவலில் இருக்கும். கடந்தாண்டு விருமன், லவ் டுடே போன்ற படங்கள் யுவன் இசையமைத்திருந்தார். இந்த வருடம் ஏழு கடல் ஏழுமலை, இறைவன் போன்ற படங்களுக்கு இசையமைக்கிறார்.

2. அனிருத் : இளம் இசையமைப்பாளரான அனிருத் கையில் தற்போது எக்கச்சக்க படங்கள் உள்ளது. கடந்த ஆண்டு வெளியான படங்களில் டான், பீஸ்ட், விக்ரம், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். அதேபோல் இந்த வருடமும் டாப் நடிகர்களான ரஜினியின் ஜெயிலர், கமலின் இந்தியன் 2, விஜய்யின் தளபதி 67 போன்ற படங்களில் அனிருத் தான் இசையமைக்கிறார்.

1. ஜிவி பிரகாஷ் : மெலோடி பாடல்களில் பூந்து விளையாடும் ஜிவி பிரகாஷ் கடைசியாக சூரரைப்போற்று படத்திற்காக தேசிய விருது வாங்கி இருந்தார். மேலும் இப்போது பா ரஞ்சித், விக்ரம் கூட்டணியில் உருவாகும் தங்கலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் ஆகிய படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இவருடைய பாடல்களை ரசிகர்கள் அதிகம் விரும்பி கேட்பதால் நம்பர் ஒன் இடத்தில் ஜிவி பிரகாஷ் உள்ளார்.

Also Read : 2022ல் அதிக படங்களை இசையமைத்த டாப் 5 இசையமைப்பாளர்கள்.. ஆஸ்கார் நாயகனையே பின்னுக்கு தள்ளிய ராஜா வீட்டு கன்னுக்குட்டி

Trending News