வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இந்த வாரம் நாமினேட்டான 6 நபர்கள்.. ஒரே போட்டியாளரை கட்டம் கட்டி தூக்கிய பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி 50 நாட்களை தாண்டி விட்டது. இப்போது பாதி கிணறு தாண்டிய போட்டியாளர்களில் இந்த வார நாமினேஷனில் யார் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

மேலும் இந்த வாரம் மைனா நந்தினி, விக்ரமன் மற்றும் அசீம் ஆகியோர் வீட்டின் தலைவருக்கான போட்டியில் பங்கேற்றனர். அதற்கான டாஸ்க்கில் அசீம் வெற்றி பெற்றதால் இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது.

Also Read : ஜிபி முத்துவுக்கு கோரிக்கை வைத்த சசிகுமார்.. பிக்பாஸ்க்கு பின் இருக்கும் முக்கிய பொறுப்பு

இதில் பெரும்பாலான போட்டியாளர்கள் ரக்ஷிதாவையே தேர்வு செய்தனர். ஏனென்றால் எல்லா விஷயத்திற்கும் கோபப்படாமல் ஒரே ரியாக்ஷன் கொடுத்து வருவதாக பலரும் கருதுகிறார்கள். இவரைத் தொடர்ந்து ரக்ஷிதாவின் தோழியான மைனா நந்தினியும் தேர்வாகியுள்ளார்.

மேலும் ரக்ஷிதாவுக்கு அடுத்தபடியாக அதிக ஓட்டு பெற்று நாமினேட்டானவர் குயின்சி. இவர் எந்தப் போட்டியிலும் ஈடுபாடுடன் கலந்து கொள்வதில்லை. மேலும் தனலட்சுமி மற்றும் ஜனனி ஆகியோரும் சில வாக்குகள் பெற்று நாமினேஷனில் தேர்வாகியுள்ளார்கள்.

Also Read : இவள மொத தூக்குங்க பிக் பாஸ்.. பார்த்தாலே இரிடேட்டாகும் போட்டியாளர்

இந்த வாரமும் கதிரவன் நாமினேஷனில் சிக்கி உள்ளார். இந்நிலையில் 8வது வார முடிவில் குயின்சி வெளியே போக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் மற்ற போட்டியாளர்களை காட்டிலும் இவரது பங்களிப்பு தான் மிகவும் குறைவாக உள்ளது.

இதனால் தான் போட்டியாளர்கள் கட்டம் கட்டி குயின்சியை நாமினேட் செய்துள்ளனர். ஆகையால் இவர் தான் குறைந்த வாக்குகள் பெற்று இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என 100-இல் 90% கணிக்கப்படுகிறது. மேலும் ரக்ஷிதா இந்த வாரத்தில் இருந்து தனது ஆட்டத்தை தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கலாம்.

Also Read : பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் விக்ரமன் தான்.. அடித்து சொல்லும் நட்சத்திர ஜோடி

Trending News