திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யை வைத்து படம் எடுத்து காணாமல் போன 6 முதலாளிகள்.. காலை வாரிவிட்ட புலி

Actor Vijay: விஜய் இப்போது பாக்ஸ் ஆபிஸ் ராஜாவாக இருக்கிறார். சமீப காலமாகவே அவருடைய படங்கள் சர்வதேச அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அதனாலேயே இப்போது பல கார்ப்பரேட் நிறுவனங்கள் அவரை வைத்து படம் எடுக்க போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் இவரை வைத்து படம் எடுத்து காணாமல் போன தயாரிப்பாளர்களும் உள்ளனர்.

அதன்படி விஜய்யின் நண்பன் படத்தை ஜெமினி ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது. சங்கர் இயக்கத்தில் சத்யராஜ், இலியானா உட்பட பலர் நடித்திருந்த இப்படம் ஹிந்தி படத்தின் ரீமேக் ஆகும். ஆனால் தமிழில் மிகப் பெரிய அளவில் வெற்றியை இப்படம் பெறவில்லை. இதை அடுத்து ஜெமினி ஃபிலிம்ஸ் ஒரு சில படங்களை தயாரித்து இருந்தாலும் இப்போது காணாமல் போன லிஸ்டில் தான் இருக்கின்றனர்.

அடுத்ததாக சந்திர பிரகாஷ் ஜெயின் என்பவர் விஜய்யின் தலைவா படத்தை தயாரித்திருந்தார். ஆனால் இது பெரிய அளவில் அவருக்கு லாபத்தை தரவில்லை. அதனாலேயே அவருடைய ஸ்ரீ மிஸ்ரி ப்ரொடக்ஷன் தற்போது வரை எந்த படங்களையும் தயாரிக்காமல் இருக்கிறது. அதே போல் பி டி செல்வகுமார் விஜய்யை வைத்து புலி படத்தை தயாரித்திருந்தார்.

Also read: விஜய் பண்ற வேலையெல்லாம் பார்த்தா கடைசில ராமராஜன் கதி தான் போல.. ரஜினியை பார்த்து கொஞ்சம் திருந்துங்க தளபதி

அது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும் அடுத்ததாக போக்கிரி ராஜா படத்தை தயாரித்த அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இப்போது வரை அவர் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. அடுத்ததாக பழம்பெறும் நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் விஜய்யின் பைரவா படத்தை தயாரித்திருந்தது.

ஆனால் அது காலை வாரி விட்டது. அதை அடுத்து விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படத்தை அவர்கள் தயாரித்தனர். அதுவும் ஒர்க் அவுட் ஆகாத நிலையில் தற்போது அவர்கள் ஒதுங்கி இருக்கின்றனர். அடுத்ததாக தேனாண்டாள் ஃபிலிம்ஸ் விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்திருந்தனர். அது அவர்களுக்கு லாபத்தை கொடுத்த போதிலும் அதன் பிறகு அவர்கள் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை.

இந்த வருட தொடக்கத்தில் அவர்கள் தயாரித்த வல்லவனுக்கும் வல்லவன் என்ற படம் வெளியானது. ஆனால் வந்த வேகத்தில் அது காணாமல் போனது. அடுத்ததாக சேவியர் பிரிட்டோ மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்தார். ஆனால் அதன் பிறகு அவர் டிவி சீரியல்களை தயாரிக்க சென்று விட்டார். இப்படியாக இந்த ஆறு தயாரிப்பாளர்களும் விஜய் படத்திற்கு பிறகு தயாரிப்பில் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர்.

Also read: ரஜினி, அஜித்துக்கு கொக்கி போடும் விஜய் தம்பி.. பாட்ஷாவை தூக்கி சாப்பிட தயாராகும் ஸ்கிரிப்ட்

Trending News