Adipurush OTT Release: இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் சயிப் அலிகான் இணைந்து நடித்த ஆதிபுரூஷ் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் தியேட்டரில் ரிலீஸ் ஆகியது. அப்பொழுது பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு, ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்த இந்த படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது போல் மீண்டும் விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறது.
இந்தப் படத்தின் டிரைலர் வெளியான பொழுது மோசமான கிராபிக்ஸ் காட்சிகளால் பங்கமாக கலாய்க்கப்பட்டது. அதன் பின்னர் ரூபாய் 100 கோடி செலவு செய்யப்பட்டு மீண்டும் கிராபிக்ஸ் காட்சிகள் மேம்படுத்தப்பட்டன. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பான் இந்தியா மூவியாக ரிலீஸ் ஆன இந்த படம் எந்த ஒரு மாநிலத்திலும் தேராமல் மொத்தமாய் மண்ணை கவ்வியது.
இந்த நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி படக்குழு இந்த படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்து இருக்கிறார்கள். மேலும் இந்த படத்திற்கு விளம்பரம் கூட இல்லையாம். பாகுபலி போன்ற மெகா ஹிட் கொடுத்த பிரபாஸின் சினிமா கேரியரில் இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்ததற்கு முக்கியமாக இந்த ஆறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடும் இந்த படத்தில் மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால் எல்லாமே சொதப்பல் தானாம். அதில் முக்கியமாக சொல்லப்படுவது ராவணனின் கதாபாத்திரத்தை இயக்குனர் வடிவமைத்திருந்த விதம். மிகப்பெரிய பட்ஜெட்டில் அரைகுறையாக உருவாக்கப்பட்ட படம் தான் ஆதி புருஷ் என தற்போது சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்திருக்கிறது.
Also Read:திரும்பும் பக்கம் எல்லாம் கொட்டும் பணமழை.. ஜெயிலர் 3 நாள் வசூல் ரிப்போர்ட்
மட்டமான VFX தொழில்நுட்பமும் இந்த படத்தின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக சொல்லப்படுகிறது. சில காட்சிகள் நன்றாக இருந்தாலும் அதை மக்கள் மனதில் நிற்கும் அளவுக்கு அந்த இயக்குனரால் சொல்ல முடியாமல் போனதால் அந்த காட்சிகளும் எடுபடாமல் போய்விட்டது. படத்தின் நீளம் மற்றும் கடைசி ஒரு மணி நேர காட்சிகள் மொத்தமாக ரசிகர்களை போர் அடிக்க வைத்து விட்டது கூட ஒரு முக்கிய காரணமாக படத்தின் தோல்விக்கு அமைந்து விட்டது.
ஒரு மெகா பட்ஜெட் படத்தை எடுப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. அதை சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்காவிட்டால் மொத்தமும் மண்ணை கவிவிடும் என்பதற்கு இந்த படம் தான் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. படத்தின் நீளம் என்பது சுவாரசியத்தை குறைத்து விடும் என சமீப காலமாக இந்திய சினிமாவில் ஒரு சில படங்கள் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கின்றன.