ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 2, 2025

90ஸ் கிட்சுகளால் அதிகம் கொண்டாடப்பட்ட 6 சீரியல் ஹீரோக்கள்.. டாப் ஹீரோ ரேஞ்சுக்கு மிளிர்ந்த சஞ்சீவ், அட நம்ம செல்வம் தான்பா!

Serial: சீரியல்களில் ஹீரோயின் களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலகட்டம். பிரச்சனை என்று வந்தால் அதை ஹீரோயின் தான் சமாளிப்பார்.

ஹீரோ சும்மா பேருக்குத்தான் இருப்பார். இப்போ மாதிரி அதிரடி சண்டை காட்சிகள், ரொமான்டிக் காட்சிகள் எல்லாம் அப்போ இல்லை.

அப்படிப்பட்ட காலகட்டத்திலும் தங்களுடைய தனித்துவமான நடிப்பின் மூலம் 90ஸ் கிட்ஸ் கள் கொண்டாடிய சீரியல் ஹீரோக்களும் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி பார்க்கலாம்.

அதிகம் கொண்டாடப்பட்ட 6 சீரியல் ஹீரோக்கள்

சஞ்சீவ் வெங்கட்: சஞ்சீவ் இப்போது இணையவாசிகளுக்கு ட்ரோல் மெட்டீரியலாக இருக்கலாம். ஆனால் 90ஸ் கிட்ஸ் மத்தியில் டாப் ஹீரோ ரேஞ்சுக்கு செல்வாக்குடன் இருந்தார்.

மெட்டி ஒலி சீரியலில் இவருக்கு நெகட்டிவ் கேரக்டர் தான் கொடுக்கப்பட்டது. ஆனால் ஆனந்தம் மற்றும் திருமதி செல்வம் சீரியல்களில் ஹீரோவாக களம் இறங்கினார்.

அதிலும் திருமதி செல்வம் சீரியல் மூலம் பெண் ரசிகைகளை தன் பக்கம் கட்டி போட்டு வைத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

தீபக்: பிக் பாஸ் தனக்கு பிடித்த போட்டியாளர் என்று அறிவித்த தீபக் 90ஸ் கிட்ஸ் ஃபேவரிட் மெட்டீரியல். இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம்.

திருமதி செல்வம் என்னும் சீரியலில் ஜெர்ரி என்னும் நெகட்டிவ் கேரக்டரில் மிரட்டி இருப்பார். அதே நேரத்தில் தென்றல் சீரியல் மூலம் எல்லோருடைய பேவரட் ஹீரோவாகவும் மாறினார்.

ராஜ் கமல்: நடிகர் ராஜ்கமல் எதிர்நீச்சல் சீரியலில் ஞானம் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த கேரக்டர் மக்களிடம் அதிகமாக திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறது.

ஆனால் 90ஸ் காலகட்டத்தில் இவர் எல்லோரும் விரும்பும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனந்தம் சீரியல் இதில் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ குமார்: கடந்த 2000ம் ஆண்டில் இருந்து சின்னத்திரையில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஸ்ரீகுமார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான தலையணை பூக்கள் மற்றும் யாரடி நீ மோகினி சீரியல் இவர் நடிப்பில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. விஜய் டிவியில் தனம் சீரியலில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

திருமுருகன்: திருமுருகன் சமீப காலமாக இணையதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

ஆனால் மெட்டி ஒலி சீரியல் ஒளிபரப்பான சமயத்தில் இவர் நடித்த கோபி கேரக்டர் மக்களால் அதிகம் விரும்பப்பட்டது.

அதேபோன்று நாதஸ்வரம் சீரியலில் இவர் நடித்த கோபி கேரக்டரும் மக்களால் நல்ல வரவேற்பை பெற்றது.

அரவிந்த் ஆகாஷ்: இயக்குனர் வெங்கட் பிரபுவின் குரூப்பில் ஒருவராக இருப்பவர்தான் அரவிந்த் ஆகாஷ். இவர் சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருக்கும் போதே அதிகமாக சீரியலிலும் நடித்தார்.

இதில் இவர் நடித்த கிருஷ்ண தாசி சீரியல் சுந்தரேசன் கேரக்டர் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

Trending News