வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

டிஆர்பி ரேட்டிங்கை தலைகீழாக மாற்றிய 6 சீரியல்கள்.. சிங்கபெண்ணே சீரியலை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவியின் ஆட்டநாயகன்

This week top 6 Trp Rating: ஒவ்வொரு வாரமும் வெள்ளித்திரையில் எத்தனையோ படங்கள் வெளிவந்தாலும் தினமும் வீட்டில் இருந்தபடியே பார்க்கும் சீரியலுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில் இல்லத்தரசிகளின் மனதை கொள்ளை அடித்த சீரியல்கள் தற்போது ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து பார்க்கும் படியாக நேரத்தை செலவழிக்கிறார்கள்.

அதனால் சீரியல் மூலம் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரித்து விட வேண்டும் என்று சில சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு புது புது நாடகத்தை கொண்டு வருகிறார்கள். அப்படி எத்தனை சேனல்கள் வந்தாலும் அசைக்க முடியாத நம்பர் ஒன் இடத்தில் இருப்பது சன் டிவி தான். ஆனால் இந்த வாரம் அந்த சன் டிவியை ஆட்டம் காண வைத்து விட்டது விஜய் டிவி. அதை பற்றி தற்போது பார்க்கலாம்.

சன் டிவிக்கு விஜய் டிவி கொடுத்த முதல் அடி

அதாவது ஆறாவது இடத்தில் கடந்த இரண்டு வாரங்களாக இருந்த மல்லி சீரியல் தற்போது ஏழாவது இடத்திற்கு போய்விட்டது. அதற்கு பதிலாக பாக்கியலட்சுமி சீரியல் 7.12 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்திற்கு வந்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் ராதிகா மற்றும் கோபிக்கு இடையில் ஏற்பட்ட விரிசல், மனவேதனையில் தவிக்கும் ஈஸ்வரி, இவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று போராடும் பாக்யாவின் முயற்சி போன்ற விஷயங்கள் பரபரப்பாக இருந்து வருகிறது.

அடுத்ததாக ஐந்தாவது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல். கதை இருக்கும் இல்லையோ அண்ணன் தம்பியின் பாசத்தை வைத்து பல வருடங்களாக உருட்டி வரும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 7.50 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. புதுசாக ஒரு குடும்பத்தை கொண்டு வந்து வேற ஒரு டிராக்கு கதை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வருகிறது.

இதனை அடுத்து கடந்த மாதம் புதிதாக வந்த மருமகள் சீரியல் 7.58 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது. மோதலில் ஆரம்பித்த சண்டை காதலில் தான் முடியும் என்ற சொல்வதற்கேற்ப ஆதிரை மற்றும் பிரபுக்கும் கல்யாணம் நடக்கப்போகிறது.

அடுத்ததாக பல வருடங்களாக கயலை துரத்தி துரத்தி காதலித்த எழிலுக்கு தற்போது தான் ஒரு விடிவு காலம் என்பதற்கு ஏற்ப கயலுடன் நிச்சயதார்த்தமானது. ஆனால் நிச்சயதார்த்தமான கையுடன் எழிலை விட்டு கயல் கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து வருகிறார். இதில் பெரியப்பாவின் சூழ்ச்சி வலையில் சிக்கிய மூர்த்தி குடும்பத்தை அடமானம் வைத்து விட்டார். இப்படி பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் கயல் சீரியல் இந்த வாரம் 8.08 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

இதனை அடுத்து சிங்க பெண்ணே சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து இப்பொழுது வரை முதல் இடத்தை பிடித்தது. ஆனால் தற்போது இந்த இடத்திற்கு போட்டியாக விஜய் டிவி ஆட்டநாயகனாக ஜொலித்து வரும் முத்துவின் சிறகடிக்கும் ஆசை சீரியல் முதல் இடத்தை பிடித்து விட்டது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் சிறகடிக்கும் ஆசை 8.38 புள்ளிகளை பெற்று சிங்கபெண்ணே சீரியலை பின்னுக்கு தள்ளிவிட்டது. இதனால் இந்த வாரம் 8.27 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் சிங்க பெண்ணே சீரியல் இருக்கிறது.

டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்த சீரியல்கள்

Trending News