ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சன் டிவியை விட விஜய் டிவியில் சுவாரசியமாக போகும் 6 சீரியல்கள்.. கமுக்கமாக டீல் பேசி வரும் கலாநிதி

Vijay Tv Serial: சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்று ஒரு காலத்தில் பெரும் புகழையும் பெற்றிருந்தது. ஆனால் அதை கொஞ்சம் கொஞ்சமாக சரித்துக் கொண்டு விஜய் டிவி சீரியல் கொடிகட்டி பறந்து வருகிறது. அந்த வகையில் தற்போது சன் டிவி சீரியலை பின்னுக்கு தள்ளும் அளவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் சுவாரசியமாக போய்க்கொண்டிருக்கிறது. அது என்னென்ன சீரியல்கள் என்பதை பார்க்கலாம்.

மகாநதி: விஜய் மற்றும் காவிரி ஒருத்தரை ஒருத்தர் காதலித்து வருகிறார்கள். ஆனால் அந்த காதலை எப்படி சொல்வது என்று தயக்கத்துடன் ஒப்பந்தத்தின் படி தான கல்யாணம் ஆகி இருக்கிறது என்று ஒரு கோட்பாட்டை வைத்து பழகி வருகிறார்கள். ஆனால் காவேரி மனதிற்குள் விஜய்யும், விஜய் மனசுக்குள் காவிரியும் இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர்களுடைய காதல் ஜெயித்து விடும் என்று எதிர்பார்த்தால் தற்போது வெண்ணிலா மற்றும் நவீன் மூலம் புதுசாக பிரச்சினை கிளம்பி இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி எப்படி இவர்கள் காதலை சொல்லி ஒன்று சேரப் போகிறார்கள் என்பது தான் சுவாரசியமாக இருக்கிறது.

டாப் கியர் போட்டு சீரியலை முன்னுக்கு கொண்டு வரும் விஜய் டிவி

சின்ன மருமகள்: சேதுவை கல்யாணம் பண்ண கூடாது என்று தமிழ் கல்யாணத்துக்கு முன் செய்த தவறு தற்போது வரை துரத்திக் கொண்டு வருகிறது. ஆனால் உண்மை எதுவும் தெரியாத சேது, தமிழ் ஆசைப்பட்ட மாதிரி படிக்க வைக்க வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறார். இதற்கிடையில் தமிழ் தான் போன் போட்டு கொடுத்தார் என்று குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வைக்க வேண்டும் என்று பல வழிகளில் சதி நடந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் படிக்கிறாரோ இல்லையோ, கூடிய விரைவில் அம்மாவாக போகிறார். அந்த சமயத்தில் சேதுக்கு உண்மை தெரிய வரும். அப்பொழுது இருவரும் சேர்ந்து வாழ்கிறார்களா அல்லது தனியாக பிரிந்து தவிர்க்க போகிறார்களா என்பது கேள்விக்குறியாக மாறும்.

ஆகா கல்யாணம்: மகாவை வெறுப்பேற்றுவதற்காக சூர்யா சில விஷயங்களை செய்து வருகிறார். இதை பார்த்து கடுப்பான மகா, சூர்யாவை பழி வாங்குவதற்காக டிராமா பண்ணுகிறார். இப்படி இவர்கள் டாம் அண்ட் ஜெர்ரியாக சண்டை போடும் நேரத்தில் புதுசாக வந்த அனாமிகாவால் பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் காயத்ரி முழுவதுமாக மாறிக்கொண்டு வீட்டில் இருப்பவர்களை காயப்படுத்தி பேசுகிறார். இதனால் சித்ராவுடன் சேர்ந்து காயத்ரி மற்றும் அனாமிகா குடும்பத்திற்கு எதிராக மாறப் போகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: தான் கூட்டிட்டு வந்த மருமகள் என்று பாண்டியன், தங்கமயிலை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார். ஆனால் அது தங்கமயில் இல்ல பொய்யும் பித்தலாட்டமும் சேர்ந்த கவரிங் என்று தெரியாத பாண்டியனுக்கு மீனா மற்றும் ராஜி இளக்காரமாக தெரிகிறார். இதனால் நம்மை நம்பி வந்த மீனா சின்ன சின்ன சந்தோஷங்களையும் அனுபவிக்காமல் இருக்கிறார் என்று செந்தில் தற்போது பாண்டியன் மீது கோபப்பட்டு வருகிறார். இதே கோபம் தொடர்ந்து வந்தால் பூகம்பமாக வெடித்து பிரச்சினை ஆரம்பமாக வாய்ப்பிருக்கிறது.

பாக்கியலட்சுமி: தெரிஞ்சோ தெரியாமலோ இனியா செய்த சில விஷயங்கள் பாக்கியா குடும்பத்துக்கு அவமானமாக முடிந்து விட்டது. அதனால் இந்த அவமானங்களை எண்ணி லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு போகலாம் என்று முடிவு பண்ணிய இனியாவை கையும் களவுமாக பாக்கியா பிடித்துக் கொண்டார். பிறகு அட்வைஸ் மழை பொழிந்த பின் இனியா அம்மாவுக்கு ஏற்ற மகளாக மாறிவிட்டார். பிறகு சந்தோசத்துடன் பாக்கியா குடும்பம் இருக்கும் தருணத்தை பார்த்து கோபி வைத்திருச்சலில் தவிக்க போகிறார்.

சிறகடிக்கும் ஆசை: விஜயா வீட்டில் இருக்கும் முத்து மீனாவிற்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் இல்லாமல் தங்குவதற்கு இடமும் இல்லாமல் அல்லல் பட்டு வருகிறார்கள். இந்த சூழலில் ரோகினியின் மகனை தத்தெடுக்க போகிறார்கள். இதுவும் ஒரு விதத்தில் நல்லதுக்கு தான் என்று ரோகினி சம்மதம் தெரிவிக்கப் போகிறார். அந்த வகையில் கிரிஷ், முத்து மற்றும் மீனாவின் அரவணைப்பில் வளர போகிறார். அதே நேரத்தில் ரோகினி மீண்டும் அம்மாவாக போகிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒவ்வொரு நாளும் ரோகிணி மாட்டிக்கொண்டு முழிக்கப் போகிறார்.

இப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல்கள் அனைத்தும் மக்களின் பேவரைட் சீரியலாக இடம் பிடித்து விட்டது. அதனால் சன் டிவி கொஞ்சம் டிஆர்பி ரேட்டிங்கில் அடிபட்டுவிட்டது. இதனால் உடனே சரி செய்யும் விதமாக கலாநிதி, டம்மியாக போகும் சீரியல்களை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டலாம் என்று முடிவு பண்ணி புது சீரியல்களுக்கு அஸ்திவாரத்தை போட்டு வருகிறார். அந்த வகையில் நல்லா போகாத சீரியல் இயக்குனரிடம் முடிக்க சொல்லி டீல் பேசி வருகிறார்.

Trending News