ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

40 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கும் 6 சப்போர்ட்டிங் ஆக்டர்ஸ்.. பல தலைமுறை பார்த்த கமலின் உயிர் நண்பன்

படத்தில் ஹீரோ, ஹீரோயின்களை தாண்டி பெரிதும் பேச வைக்கும் கதாபாத்திரம் தான் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட். ஒரு சில படங்களில் இவர்களையே மிஞ்சிய நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்கள். அவ்வாறு தன் நடிப்பினை எப்படியாவது வெளிகாட்டிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பவர்கள் தான் துணை நடிகர்கள்.

மேலும் இது போன்ற கதாபாத்திரங்கள் மூலம் தனக்கு ஹீரோவாகும் வாய்ப்பு கிடைக்காதா என்ற விடாமுயற்சியில் தொடர்ந்து பணிபுரிவார்கள். அவ்வாறு 40 ஆண்டுகளாக தன்னை ஒரு துணை நடிகர்களாகவே அடையாளப்படுத்திக் கொண்ட 6 சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்டை பற்றி இங்கு பார்க்கலாம்.

Also Read: ஒரு வழியா அடுத்த இயக்குனரை லாக் செய்த உலக நாயகன்.. மணிரத்தினத்திற்கு கொடுத்த அல்வா

வாகை சந்திரசேகர்: 1980ல் நிழல்கள் என்னும் படத்தின் மூலம் துணை நடிகராக அறிமுகமானவர். அதன் பின் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் இடம் பெற்று இருக்கிறார். மேலும் கல்லுக்குள் ஈரம், ரத்த தானம், ஊமை விழிகள், கரகாட்டக்காரன் போன்ற படங்கள் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. அதிலும் குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம் எனும் படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக கவர்ந்த ஒன்றாகும்.

ராஜேஷ்: இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் 47 ஆண்டுகளுக்கு மேலாக, சுமார் 150 படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தன்னுடைய எளிமையான நடிப்பால் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்திருக்கிறார். அவள் ஒரு தொடர்கதை, அந்த ஏழு நாட்கள், மெட்டி, தாய் வீடு போன்ற பல படங்களில் நடித்த இவர் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: விஜய்யை நம்ப வைத்து கழுத்தறுத்த இயக்குனர்.. கேஜிஎஃப் நடிகரை வைத்து காய் நகர்த்தும் சன் பிக்சர்ஸ்

டெல்லி கணேஷ்: இவர் நடிகராகவும், காமெடியனாகவும் மற்றும் சீரியல் ஆக்டர் ஆகவும் பல வேடங்களை ஏற்று தன் நடிப்பினை வெளிக்காட்டியவர். சுமார் 400க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ராஜபார்வை, மூன்று முகம், முள் இல்லாத ரோஜா, சிவப்பு சூரியன் போன்ற படங்களில் இடம் பெற்ற இவரின் துணை கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்த ஒன்றாகும்.

விஜயகுமார்: 40 வருட காலமாக இவரின் சினிமா பயணம் தொடர்ந்து வரும் நிலையில் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அக்னி நட்சத்திரம், கிழக்குச் சீமையிலே,நாட்டாமை, முதல்வன் ஆகிய படங்கள் இவருக்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்தது. அதிலும் குறிப்பாக கிழக்கு சீமையிலே என்னும் படத்தில் இவரின் அண்ணன் பாசம் மக்களை வெகுவாக கவர்ந்த ஒன்றாகும்.

Also Read: விக்ரம் வசூல், லியோ பிசினஸ் மொத்தமாக அள்ளிய ஜெயிலர்.. சம்பவம் செய்யும் நெல்சன்

மௌலி: பன்முகத் திறமை கொண்ட இவர் 40 வருட காலமாக தமிழ் சினிமாவில் இடம் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கிய படங்களின் மூலம் இவர் வெற்றி வாகை சூடினார். அதிலும் குறிப்பாக பம்மல் கே சம்பந்தம், நள தமயந்தி இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. மேலும் இவர் பல படங்களில் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்து வெற்றி கண்டு இருக்கிறார்.

சந்தான பாரதி: கமலின் உயிர் தோழன் ஆன இவர் காமெடியனாகவும், சிறந்த சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் கமலுடன் இணைந்து நடித்த படங்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக விக்ரம் படத்தில் ஏஜென்ட் உப்பிலியப்பனாய் இடம் பெறும் இவர் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் சன் டிவியில் வரும் இனியா சீரியலில் நடித்து வருகிறார்.

Also Read: பிக் பாஸில் வந்த பிறகு சீரியல் வாய்ப்பும் பறிபோனதா? உண்மையை உடைத்த ரட்சிதா

Trending News