வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தளபதி 67ல் உறுதியான 6 கேங்ஸ்டர் நட்சத்திரங்கள்.. ஆக்சன் கிங் அர்ஜூனுடன் இணையும் வில்லன்

தளபதி விஜய் இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தன்னுடைய 67வது படத்திற்காக இணைந்திருக்கிறார். இந்த படம் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை பற்றி அவ்வப்போது வதந்திகளை உருவாக்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது தளபதி 67 இல் இணைந்திருக்கும் ஆறு நட்சத்திரங்களின் பெயர்கள் வெளியாகி இருக்கிறது.

திரிஷா: நடிகை திரிஷா தளபதி விஜய்க்கு வெற்றி நாயகி என்று சொல்லலாம். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கில்லி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன் பிறகு ஆதி, குருவி என இரண்டு படங்களில் திரிஷா விஜய் உடன் நடித்தார். தற்போது நான்காவது முறையாக த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

Also Read: விஜய்க்காக கொலை செய்யும் அளவிற்கு எஸ்ஏசி-க்கு வந்த கோபம்.. பிரபல நிறுவனத்தை அடித்து நொறுக்கிய சம்பவம்.!

சஞ்சய் தத்: சஞ்சய் தத் இந்தி சினிமா உலகின் முன்னணி நடிகர் அவர். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்து பட்டைய கிளப்பி இருக்கிறார். தற்போது தளபதி 67 மூலம் இவர் நேரிடையாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.

மிஷ்கின்: தளபதி 67 இல் முதன் முதலில் உறுதியானது இயக்குனர் மிஷ்கின் தான். தன்னுடைய சிறப்பான இயக்கத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், சமீப காலமாக தன்னுடைய நடிப்பினாலும் முத்திரை பதித்து வருகிறார். தற்போது இவர் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அர்ஜுன்: 90களில் ஆக்சன் ஹீரோவாக கலக்கிய அர்ஜுன் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் முதன் முதலில் மணிரத்தினத்தின் கடல் திரைப்படத்தில் கேரக்டர் பண்ணினார். தற்போது இந்தப் படத்திலும் வில்லனாக தான் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Also Read: ரஜினி காலில் விழும் எஸ் ஏ சி.. விஜய் தனது அப்பாவை வெறுக்க இப்படி ஒரு காரணமா.!

கௌதம் வாசுதேவ் மேனன்: ஹாலிவுட் சினிமாவில் காதலை நிச்சயமாக சொல்லும் இயக்குனர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். அவ்வப்போது சில படங்களில் முகத்தை காட்டி வந்த இவர் சமீப காலமாக படங்களில் வில்லனாக நடிக்கவும் தொடங்கி இருக்கிறார். தளபதி 67 இல் கௌதம் நடிப்பதும் உறுதியாகியிருக்கிறது.

மன்சூர் அலிகான்: 90களில் கொடூரமான வில்லனாக நடித்த கொண்டிருந்தவர் தான் நடிகர் மன்சூர் அலிகான். தற்போது தன்னுடைய எதார்த்தமான பேச்சுக்களால் மக்களை வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முந்தைய பேட்டியில் சொன்னது போலவே தன்னுடைய அடுத்த படமான தளபதி 67 இல் மன்சூர் அலிகான் நடிக்க வைக்கிறார்.

Also Read: மீண்டும் ஓடிடி-யில் மல்லுக்கட்டும் வாரிசு, துணிவு.. ஒரே நாளை குறி வைத்த அமேசான், நெட் பிளிக்ஸ்

Trending News