ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கங்குவாவுடன் மோதுமா வேட்டையன்.? உடையும் சஸ்பென்ஸ், இந்த மாதத்தில் வரிசை கட்டும் 6 அப்டேட்டுகள்

Kanguva: கோலிவுட்டை பொறுத்த வரையில் வருடத்தின் இரண்டாம் பாதி அமோகமாக இருக்கிறது. அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் வந்து ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறது. அதில் இந்தியன் 2 பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் படம் வெளியாகி மொக்கை வாங்கிய நிலையில் இந்த மாதம் பல படங்கள் வரிசை கட்டுகிறது. அந்த வகையில் தங்கலான், டிமான்ட்டி காலனி 2, அந்தகன், ரகு தாத்தா போன்ற படங்கள் மீடியாக்களின் கவனத்தை பெற்றுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படங்கள் வெளிவர இருக்கும் நிலையில் இந்த மாதம் முழுவதும் ஏகப்பட்ட அப்டேட்டுகள் வர இருக்கிறது. இதனால் டாப் ஹீரோக்களின் ரசிகர்கள் தற்போது டிவிட்டர் தளத்தில் பிஸியாக இருக்கின்றனர்.

அதன்படி கோட் படத்தின் மூன்றாவது பாடல் இன்னும் சில தினங்களில் வர இருக்கிறது. அதேபோல் டீசரை வெளியிடவும் வேலைகள் நடந்து வருகிறது. இதற்கு அடுத்ததாக ரஜினியின் வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் ரிலீஸ் தேதி இந்த மாதம் அறிவிக்கப்பட இருக்கிறது.

அக்டோபர் மாதத்தை லாக் செய்துள்ள பட குழு தேதியை மட்டும் குறிப்பிடவில்லை. ஆனால் பத்தாம் தேதி கங்குவா படத்துடன் மோதும் என தகவல்கள் கசிந்தது. அந்த சஸ்பென்ஸ் விரைவில் உடைபட இருக்கிறது.

வேட்டையன் ரிலீஸ் எப்போது.?

இதற்கு அடுத்தபடியாக கங்குவா படத்தின் இரண்டாம் பாடல் இந்த மாதம் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே வெளிவந்த முதல் பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதற்கு அடுத்து சிவகார்த்திகேயனின் அமரன் முதல் பாடலும் இந்த மாதம் தான் வெளிவர உள்ளது.

மேலும் கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகி இருக்கும் மெய்யழகன் படத்தின் முதல் பாடலும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இன்றி பல மாதங்களாக ரசிகர்களை ஏங்க வைத்த விடாமுயற்சி அப்டேட்டும் இந்த மாதம் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.

அந்த வகையில் ஃபர்ஸ்ட் சிங்கிள், கிளிம்ஸ் வீடியோ மற்றும் ரிலீஸ் தேதி ஆகிய அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அறிவிக்கப்பட இருக்கிறது. அஜித் நடிப்பில் கடந்த வருடம் தொடங்கப்பட்ட இப்படம் இந்த வருட தீபாவளியை குறி வைத்துள்ளது.

இப்படியாக இந்த வருடத்தின் முக்கிய படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. அதன் முன்னோட்டமாக ஆகஸ்ட் மாதத்தில் டாப் ஹீரோக்கள் தங்கள் பட அப்டேட்டுகளை வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அடுத்தடுத்து வெளிவர இருக்கும் அப்டேட்டுகள்

Trending News