வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

மறக்கவே முடியாத 5 வில்லன் கதாபாத்திர பெயர்கள்.. கபாலியாகவே மாறிய வால்டர் வெற்றிவேல் பொன்னம்பலம்

6 villains who threatened to tamil fans: கலைஞனின் படைப்பில் நாயகனை முன்னிலைப்படுத்த ஒரு வில்லன் கதாபாத்திரம் தேவையாகிறது. வில்லனின் அழுத்தத்தை பொறுத்தே நாயகனுக்கு சிறப்பு கிடைப்பதால் வில்லன் பலமானவனாக அமைவது அவசியமாகிறது தமிழ் சினிமாவில் வில்லன் என்றாலே பீதியை கிளப்பிய ஆறு நடிகர்களை காணலாம்.

மார்க் ஆண்டனி: மாடுலேஷன் கிங் என்றால் அது ரகுவரன் ஆக மட்டுமே இருக்க முடியும். ஸ்மார்ட் வில்லனாக பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனியாக தனது எதார்த்தமான நடிப்பில் பார்வையாளர்களை மிரட்டி விடும் ரகுவரனின் நடிப்பு நாயகனுக்கு நிகரானது எனலாம்.

வீரபுத்திரன்:  கேப்டன் பிரபாகரன் படத்தில் வீரபுத்திரன் கதாபாத்திரத்தை ஏற்ற மன்சூர் அலிகான் தன் முக பாவனைகள் மற்றும் உடல் மொழியாலையே எதிரே இருப்பவரை வஞ்சம் வைத்து அளிக்கும் தோரணையே உருவாக்கி இருந்தார். இப்படத்தை பார்த்த அனைவரும் மன்சூர் அலிகானை கண்டு மிரண்டு தான் போனார்கள்.

Also read: இதோட நிறுத்திக்கங்க! இல்லனா பிரளயமே வெடிக்கும் என எச்சரிக்கும் மன்சூர் அலிகான்

முத்துப்பாண்டி: விஜய் நடித்த கில்லியில் பிரகாஷ்ராஜின் முத்துப்பாண்டி கேரக்டர் அதிக அளவில் பேசப்பட்டது. பயப்படும்படி இல்லாமல் வில்லனையே ரசிக்க வைத்த கதாபாத்திரமாக அமைந்தது முத்துப்பாண்டி. “அப்பா! பாட்டு பாடவா பாடம் சொல்லவா” என ஜெமினி கணேசனை முன்னிறுத்தி அவர் செய்த காமெடி ரசிக்கும் படியாக இருந்தது.

அசால்ட் சேது: “தலைவா வேற ரகம் பார்த்து உசாரு” என்பது போல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டாவில் வில்லத்தனத்தின் கொடூரத்தை அப்பட்டமாக தெறிக்க விட்ட அசால்ட் சேதுவான பாபி சிம்ஹா தன் செயல்கள் மூலம் ரசிகர்களை மிரள செய்திருந்தார். இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது என்பது கூடுதல் சிறப்பு.

கபாலி : தமிழில் ஆரம்பித்து பாலிவுட் வரை வில்லனாக கொடி நாட்டி வந்தவர் பொன்னம்பலம். நாட்டாமை தாய்க்கிழவியை இன்றுவரை பிரபலமாக்கிய பொன்னம்பலம்,கபாலி என்கிற பெயரில் 200 நாட்களுக்கு மேல் ஓடிய வால்டர் வெற்றிவேல் திரைப்படத்தில் ரசிகர்களை மிரட்டி இருந்தார். இந்த படத்திற்கு பின் கபாலி  என்கிற பெயர் பொன்னம்பலத்திற்கு பிராண்டாக அமைந்தது.

மாயன்: நடிப்பது போல் அல்லாமல் பார்வையாளர்களுக்கு எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கி உண்மையான வில்லத்தனத்தை வெளிக்காட்டி இருந்தார் தேவர் மகன் படத்தில் மாயன். நாசரே தவிர இந்த கேரக்டருக்கு யாரும் செட்டாக இருக்க மாட்டார்கள் என்ற மாயையை உண்டாக்கி வில்லனாக தெறிக்க விட்டார் இந்த மாயன் நாசர்.

Also read: திறமை இருந்தும் கேரக்டர் இல்லாமல் அழிந்த 6 ஹீரோக்கள்.. ஆணவத்தால் மதிப்பை கெடுத்த பாபி சிம்ஹா

Trending News