புதன்கிழமை, ஜனவரி 8, 2025

6 வருடங்கள் கழித்து கௌதம் கார்த்திக் படத்திற்கு வந்த விடிவுகாலம்.. அப்பவே செம எதிர்பார்ப்பில் இருந்த படமாச்சே!

கௌதம் கார்த்திக் படங்கள் தொடர்ந்து வரவேற்பை பெற்ற காலகட்டங்களில் உருவான ஒரு படம் கிட்டத்தட்ட 6 வருட காலமாக படப்பிடிப்பில் இருந்து வருவது சோகமான விஷயம்தான் என்றாலும் அதற்கு தற்போது ஒரு விடிவு காலம் கிடைத்துள்ளதாம்.

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி வரவேற்பைப் பெற்றவர் கௌதம் கார்த்திக். 2013ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படமும் விமர்சன ரீதியாக ஓகே என்றாலும் வசூல் ரீதியாக ஒன்றுமே இல்லைதான்.

அதன்பிறகு இவர் நடித்த சில படங்கள் தொடர்ந்து வரவேற்பை பெற்று வந்த நிலையில் திடீரென 18+ படங்களான இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹர ஹர மகாதேவகி போன்ற படங்களில் நடிக்க வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றாலும் கௌதம் கார்த்திக்கு கெட்ட பெயரை உண்டாக்கும்.

அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகிவந்த திரைப்படம் சிப்பாய். சிம்புவுக்கு சிலம்பாட்டம் என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வந்தது.

ஆனால் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி இந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட 6 வருட காலமாக படப்பிடிப்பில் தடுமாறி வருகிறது. 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது கொரானா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் விரைவில் மீதமுள்ள படப்பிடிப்பையும் முடித்துவிட்டு விரைவில் ரிலீஸுக்கு கொண்டுவர உள்ளதாம்.

தற்போது ott காலம் என்பதால் போட்ட காசை எடுத்து விடலாம் என்ற பெரும் நம்பிக்கையில் இந்த படத்தை எடுத்து வருகிறார்கள். அதற்கு முன்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் ஏதாவது ஒரு படம் வெளியாகி வெற்றி பெற்றுவிட்டால் இந்த படம் கூடுதல் விலைக்கு வியாபாரம் ஆகும் எனவும் எதிர்பார்க்கிறாராம் தயாரிப்பாளர்.

sippai-movie
sippai-movie

Trending News