60s Heroes: தமிழ் சினிமாவில் 90களின் காலகட்டத்தை பொறுத்த வரைக்கும் படப்பிடிப்பு தளங்களில் கேரவன் என்ற வசதி கிடையாது. இதை பல நடிகைகள் தங்களுடைய பேட்டிகளில் இப்போது கூட சொல்லி வருகிறார்கள். தாங்கள் போகும் கார், மரத்தடி, அருகில் இருக்கும் ஏதாவது ஒரு வீடு என கிடைக்கும் இடத்தை துணி மாற்றுவதற்கு இந்த நடிகைகள் உபயோகித்ததாக கூட பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் இப்போதெல்லாம் தொடர்ந்து படங்களில் ஹிட் அடித்தாலே நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களுக்கு என்று சொந்தமாக கேரவன் வாங்கி விடுகிறார்கள். இதுபோன்ற வண்டிகளில் தங்களுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்து கொள்கிறார்கள். சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு அந்த கம்பெனியின் சார்பிலேயே கேரவன் ஒதுக்கப்படுகிறது.
Also Read:பல நூறு கோடிக்கு அந்த சேனலை வாங்கும் விஜய்.. அரசியல் ஆடுபுலி ஆட்டம்னா இப்படி தான் இருக்கணும்
90களின் நடிகர்கள் மற்றும் நடிகைகளே கேரவன் இல்லாமல் கஷ்டப்பட்ட பொழுது, அறுபதுகளில் இருந்த ஒரு ஹீரோ தனக்கென ஒரு கேரவன் வைத்திருந்தார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. அப்போதைய முன்னணி ஹீரோவான மக்கள் திலகம் எம்ஜிஆர் தான் அந்த நடிகர். இவர் தனக்கென்று சொந்தமாக கேரவன் ஒன்றை வைத்திருந்திருக்கிறார்.
இப்போதெல்லாம் வீடு கட்டும் பொழுது அதிலேயே நீச்சல் குளம் மற்றும் ஜிம் போன்ற அமைப்புகள் வைப்பது ரொம்பவும் இயல்பான ஒன்றாகிவிட்டது. ஆனால் எம்ஜிஆர் அந்த காலகட்டத்திலேயே தன்னுடைய வீட்டில் நீச்சல் குளம், ஜிம் வைத்திருந்திருக்கிறார். அப்போதைய காலகட்டத்தில் நடிகர்களில் எம் ஜி ஆர் ராஜபோக வாழ்க்கை இதுபோன்று வாழ்ந்திருக்கிறார்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அப்போது சினிமாவில் கொடிகட்டி பறந்தார். அவர் தொட்ட இடமெல்லாம் துலங்கும் என்பது போல் எடுக்கும் படம் எல்லாம் வெற்றியை கொடுத்தது. நடிகராக இருந்த எம்ஜிஆர் தயாரிப்பாளராகவும் மாறினார். சத்யா மூவிஸ் சார்பில் இவர் எடுத்த பல படங்கள் இவருக்கு பல மடங்கு லாபத்தை தான் கொடுத்தன.
வரும் பணத்தை எல்லாம் தனக்கென வைத்து சொத்து சேர்த்துக் கொள்ள எம்ஜிஆர் விரும்பவில்லை. தன்னுடைய சக கலைஞர்களுக்கு தன்னால் முடிந்த வரை பல உதவிகளை செய்து இருக்கிறார். இதனாலேயே தமிழ் சினிமாவின் கொடைவள்ளல் என இன்று வரை இவர் அழைக்கப்படுகிறார். இவரால் வாழ்ந்த குடும்பங்கள் தமிழ்நாட்டில் பல உண்டு.
Also Read:ஆரம்பமே அமர்க்களப்படுத்திய ஜேசன் சஞ்சய்.. லைக்கா கூட்டணியின் பின்னணி காரணம்