சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

ஆறு மாசத்தில் 60வது படங்களில் வெற்றி கண்ட பட்ஜெட் படங்கள்.. கடும் நெருக்கடி கொடுத்த அறிமுக இயக்குனர்கள்

New Directors Success Movies: சினிமாவின் வளர்ச்சி என்பது அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அது எந்த மாதிரியானது என்று நம் கண்கூடாகவே பார்த்து வருகிறோம். அந்த வகையில் வாரத்துக்கு குறைந்தது ஐந்து படங்களாவது வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த படங்கள் ஏதாவது ஒரு விதத்தில் மக்களை ஈசியாக ரீச் ஆகி வரவேற்பை பெறுகிறது. அப்படி இந்த வருட தொடங்கிய ஆறு மாதத்திற்குள் 60 படங்கள் வெளியாகி இருக்கிறது.

அதில் முன்னணி நடிகர்கள் படங்கள் வெளிவந்திருந்தாலும் அவர்கள் படத்தையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு நல்ல கதையுடன் பல படங்கள் வெளி வந்திருக்கிறது. அதைப்பற்றி நாம் இப்பொழுது பார்க்கலாம். கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கவின் மற்றும் அபர்ணாதாஸ் நடிப்பில் வெளிவந்த டாடா படம். இப்படத்தின் கதை,  தவறான புரிதலால் ஏற்படும் மன வேதனையை பற்றி ஆழமாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும்.

Also read: Good Night Movie Review – குறட்டையால் படாத பாடுபடும் மோட்டார் மோகன்.. குட் நைட் பட முழு விமர்சனம்

அடுத்ததாக ஆர்.மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த அயோத்தி திரைப்படம். இப்ப்படத்தின் முக்கிய கருத்து இந்த உலகத்தில் மனிதனை விட கொடிய மிருகம் எதுவுமில்லை என்று உணர்த்திய படமாகும். அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த விடுதலை திரைப்படம். யாரும் எதிர்பார்க்காத அளவில் மிகப்பெரிய வெற்றி படமாக மக்கள் மனதில் நிலைத்து விட்டது.

இதனைத் தொடர்ந்து விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் வெளிவந்த போர் தொழில் திரைப்படம். இப்படம் திரில்லர், க்ரைம் படமாக வெளிவந்தது. இதற்கு அடுத்து முத்துக்குமார் இயக்கத்தில் அயலி திரைப்படம், இந்திய சமூகத்தின் ஆணாதிக்க அம்சங்களை கொண்ட திரைப்படமாக வெளிவந்தது.

Also read: மாமன்னன் படத்தை பார்த்த வெற்றிமாறன்.. ஒத்த வரியில் கொடுத்த விமர்சனம்

அடுத்ததாக தயால் பத்மநாபன் இயக்கத்தில் கொன்றால் பாவம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப் நடிப்பில் ஏழை குடும்பத்தில் வாழும் பெண்ணின் மனநிலை பணதேவையால் அவரிடம் ஏற்படும் மாற்றங்களை வைத்து படமாக்கப்பட்டிருக்கும். அடுத்து தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் யாத்திசை திரைப்படம் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் வரலாற்று சம்பந்தமான கதையுடன் வெளிவந்தது.

அடுத்ததாக நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் ஃபர்ஹானா திரைப்படம் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன் மற்றும் ரமேஷ் திலக் நடிப்பில் காமெடி கலந்த நகைச்சுவை படமாக குட்நைட் திரைப்படம் வெளிவந்தது. அடுத்து ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தீராக்காதல் திரைப்படம் வெளிவந்தது. இப்படங்கள் அனைத்தும் நல்ல கதைகளுடன் அறிமுக இயக்குனர்கள் இயக்கி பட்ஜெட் படங்களாக மக்கள் மனதில் இடம் பெற்று இருக்கிறது.

Also read: Por Thozhil Movie Review – ராட்சசனுக்கு பின் தமிழ் சினிமாவை மிரட்டும் சீரியல் கில்லர்.. தியேட்டரில் திணறடிக்கும் முழு விமர்சனம்

- Advertisement -spot_img

Trending News