விஜய் நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் 3வது கட்ட படப்பிடிப்புகள் சமீபத்தில் சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் செப்டம்பர் முதல் வாரத்தில் நான்காவது கட்ட படப்பிடிப்புகள் மீண்டும் சென்னையிலேயே தொடங்கப்பட உள்ளன.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடிக்கப்போகும் புதிய படத்திற்கு அவரை சந்தித்து பல இயக்குனர்கள் கதை கூறி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் இயக்குனராக வலம் வந்த 66 வயது இயக்குனரும் கதை சொல்லியுள்ளார்.
அவர் வேறு யாரும் இல்லை. ரஜினி, சத்யராஜ் போன்றோருக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பி வாசு தான். அடுத்ததாக பி வாசு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்தை இயக்க உள்ளார் என்பது தெரிந்ததே.
இதனால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் விஜய்யிடம் ஒரு புதிய படத்திற்கான கதையை கூறியுள்ளாராம். ஆனால் கதை கேட்ட விஜய் பெரிதாக அந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்றே கூறுகின்றனர்.
தற்போது இளம் இயக்குனர்களுடன் சேர்ந்து படம் செய்வதில் விருப்பமாக இருக்கும் விஜய் இனிமேல் பி வாசு போன்ற மூத்த இயக்குனர்களுடன் சேர்ந்து படம் செய்வாரா? என்பது சந்தேகம்தான்.
