ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

10 வருஷத்திற்கு பிறகு விஜய் சேதுபதி படத்தை இயக்கப் போகும் 68 வயது இயக்குனர்.. அப்போ டாப்பு, இப்போ?

தமிழ் சினிமாவில் தற்போது கைவசம் பல படங்கள் வைத்து நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி 66 வயது இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருந்த செய்தி தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சத்தமில்லாமல் நடந்த பேச்சுவார்த்தை இது.

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது துக்ளக் தர்பார் மற்றும் லாபம் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு ரெடியாக இருந்தன. ஆனால் தற்போது மீண்டும் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மாற்றப்பட்டதால் ரிலீசை தள்ளி வைத்துவிட்டார்.

இருந்தாலும் படங்கள் நடிக்க ஒப்புக் கொள்வதை குறைத்தபாடில்லை. ஒரு நாளைக்கு இரண்டு படங்களில் நடிக்கும் அளவுக்கு பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதியின் பேவரைட் இயக்குனராக அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை இருப்பவர்தான் பாக்கியராஜ்.

பாக்கியராஜ் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க இருந்ததாகவும், எதிர்பாராத சூழ்நிலையில் அந்தப் படம் கைவிடப்பட்டது தான் தற்போதைய கோலிவுட் டிரெண்டிங். சினிமாவில் பாக்யராஜின் அருமை பெருமைகளை எல்லாம் சொல்லி மாளாது.

அந்த அளவுக்கு சாதனைகளை செய்து வைத்துள்ளார். ஆனால் சமீபகாலமாக அவரது இயக்கத்தில் ரசிகர்களுக்கு நம்பிக்கை இல்லை போல. கடைசியாக தன்னுடைய மகன் சாந்தனுவை வைத்து சித்து ப்ளஸ் டூ என்ற தோல்வி படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் பத்து வருடத்திற்கு பிறகு விஜய் சேதுபதியை வைத்து ஒரு குறும்படம் ஒன்றை இயக்க இருந்தாராம். அந்தக் கதை கூட விஜய் சேதுபதிக்கு பிடித்ததாக கூறி உள்ளார். தற்போது அந்த படம் கைவிடப்பட்டதாகவும் மீண்டும் இந்த படத்தை தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். பாக்யராஜ் படங்களில் உங்களை கவர்ந்த படம் என்ன என்பதை கமெண்டில் பதிவு செய்யலாம்.

bakkiyaraj-cinemapettai
bakkiyaraj-cinemapettai

Trending News