7 MultiTalented Actors: படத்தில் ஏற்கப்படும் கதாபாத்திரங்களை கொண்டு பெரிதாய் பேசப்படும் இவர்கள் நடிப்பையும் தாண்டி தன் தனி திறமையை வெளிக்காட்டியவர்கள். அவ்வாறு தனக்குள் இருக்கும் திறமையை வேறு விதத்தில் வெளிக்கொண்டு வந்து வெற்றி கண்ட பிரபலங்களை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.
இந்த வரிசையில், முதலில் எளிமையான நடிப்பை வெளிக்காட்டி தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் சிவக்குமார். நடிப்பை தவித்து ஓவியம், மேடைப் பேச்சாளர், வரலாற்றை கற்றறியும் புத்தகப் பிரியராகவும் தன் திறமைக்கு தீனி போட்டுக் கொண்டவர்.
Also Read: தனுஷுடன் கைகோர்க்கும் மாஸ் நடிகர்.. எக்ஸ் மாமனாருக்கு போட்டியாக மல்டி ஸ்டார்சுடன் களமிறங்கும் படம்
அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் உலகநாயகனின் புகழை சொல்லவே தேவையில்லை, அந்த அளவிற்கு நடிப்பில் அனுபவம் வாய்ந்தவர். இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திடாத நுணுக்கங்களை அறிந்து கற்றுத் தேர்ந்தவர். மேலும் அஜித்தை பொறுத்தவரை நடிப்பை தவிர்த்து பைக்கிங், கன் ஷூட்டிங் என விளையாட்டில் ஆர்வம் கொண்டவராய் சாதித்து வருகிறார்.
ரஜினி, கமல் காலத்தை சேர்ந்த ராஜேஷ் ஒரு பள்ளி வாத்தியார் ஆவார். அதைத்தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த இவர் ஹோட்டல் தொழில் செய்து வருகிறார். மேலும் ஜோதிடம் பார்ப்பது, அதை குறித்து புத்தகம் எழுதுவது மேலும் அதற்கான தேடலாய் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்த வெண்ணிறாடை மூர்த்தி பி எல் பட்டதாரி, தொழில்முறை வழக்கறிஞர் மற்றும் ஜோதிடம் பார்ப்பவர். மேலும் தன் கற்பனை கொண்டு பல திரைப்படங்களுக்கு திரைகதை எழுதியுள்ளார். இவரைப் போன்று நடிப்பை தாண்டி சிறந்த ஓவியராய் திகழ்ந்தவர் . அதிலும் குறிப்பாக இரட்டை இலை சின்னத்தை வரைந்ததும் இவர்தான்.
இவர்களை விட ஒரு படி மேலாய், சமூக அக்கறை கொண்டவர் காமெடியன் விவேக். தலைமைச் செயலகத்தில் அரசுகலை வேலை பார்த்தவர். பரதநாட்டியம், ஹார்மோனியம், வயலின், தபலா போன்ற இசை உபகரணங்களை எளிதாக வாசிக்க கூடியவராகவும் சாதித்தவர் விவேக்.
Also Read: மத்த சேனலின் டிஆர்பி-ஐ நொறுக்க கலாநிதி மாறன் போட்ட ஸ்கெட்ச்.. ஜெயிலர் தேதியை லாக் செய்த சன் டிவி