சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

7 கேட்டகிரியில் நாமினேட் செய்யப்பட்டுள்ள ஒரே தமிழ் படம்.. துல்கர் சல்மானுக்கு விருது கிடைக்குமா.!

கடந்த ஆண்டு கொரோனா தொற்று தமிழகத்திற்கு வருவதற்கு முன் கடைசியாக திரையரங்குகளில் நன்றாக ஓடி வசூல் செய்த படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மானின் 25வது படமாக அமைந்த இப்படம் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது என்றுதான் கூறவேண்டும். இதுமட்டுமின்றி அறிமுக இயக்குனரான தேசிங்கு பெரியசாமிக்கு இப்படம் தமிழ் சினிமாவில் சிறந்த பெயரை ஏற்படுத்தி உள்ளது.

இப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது தென்னிந்தியாவின் முக்கிய விருதுகளாக கருதப்படும் சைமா விருதுகள் பட்டியலில் 2020ஆம் ஆண்டுக்கான நாமினேசனில் இப்படம் இடம் பிடித்துள்ளது. அதுவும் 7 கேட்டகிரியில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சினிமா துறையில் சிறந்து விளங்கும் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து கேட்டகிரிக்கும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும். அந்த வகையில் தற்போது கடந்த ஆண்டுக்கான நாமினேசன் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான படங்களுக்கு இணையத்தில் சென்று வாக்களிக்கலாம். அதிகமான வாக்குகளை பெறும் படங்கள் மற்றும் நடிகர்களுக்கு விருது வழங்கப்படும்.

இந்நிலையில் தான் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த முதல் பட இயக்குனர், சிறந்த முதல் பட நடிகர், சிறந்த முதல் பட நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த இசையமைப்பாளர் என ஏழு கேட்டகிரியில் இடம்பெற்றுள்ளது. இதனால் இப்படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இப்படம் மூலமாக மலையாள நடிகரான துல்கர் சல்மானுக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதேபோல் இதுவரை விஜேவாக மட்டுமே பணியாற்றி வந்த விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன் இப்படம் மூலமாக சிறந்த அறிமுக துணை நடிகர் என்ற பெயரையும் பெற்றார்.

Kannum Kannum Kollai Adithaal

மேலும் அறிமுக இயக்குனரான தேசிங்கு பெரியசாமிக்கும் இப்படம் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இதன் மூலம் தற்போது அவரது அடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனிடையே, தேசிங்கு பெரியசாமி சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும் கதை சொல்லி உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Trending News