புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கிங் ஆப் கொத்தாவில் களம் இறங்கிய 7 முக்கிய பிரபலங்கள்.. துல்கர் சல்மானுடன் இணைந்துள்ள அஜித் மகள்

King of Kotha: அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில், ஜி ஸ்டூடியோ தயாரிப்பில் வெளிவந்த மலையாள ஆக்சன் திரைப்படம் தான் கிங் ஆஃப் கொத்தா. சாக்லேட் பாய் ஆன துல்பர் சல்மான் உடன் இணைந்து நடித்த 7 பிரபலங்கள் யார் யார் என்பதை இத்தொகுப்பில் காணலாம்.

இதுவரை காதல் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த துல்கர் சல்மான் இப்படத்தில் கேங்ஸ்டராய் இடம் பெற்றுள்ளார். சிறுவயதிலேயே தன் நண்பர்களுடன் ஒன்றாக இருந்து வரும் ஹீரோ கொத்தா என்னும் ஒரு ஊரை தன் கட்டுக்குள் வைத்து வரும் ரவுடியாய் இடம் பெற்றுள்ளார்.

Also Read: படையோட வலிமை தலைவன் கொடுக்கிற நம்பிக்கையில தான் இருக்கு.. கேப்டன் மகனின் அசரவைக்கும் கிளிம்ஸ் வீடியோ

மேலும் இப்படத்தில் இவரின் காதலியாக ஐஸ்வர்யா லட்சுமி, தாரா கதாபாத்திரத்தில் தன் எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார். அதை தொடர்ந்து தமிழில் பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வரும் பிரசன்னா இப்படத்தில் சிஐ அதிகாரியாய் குற்றங்களை அடக்கும் நேர்மையான கதாபாத்திரத்தில் இடம்பெற்று இருக்கிறார்.

என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அஜித்தின் மகளாய் நடித்த அனிகா சுரேந்திரன் இப்படத்தில் துல்கர் சல்மானின் தங்கை கதாபாத்திரத்தில் இடம் பெற்று இருக்கிறார். அதைத் தொடர்ந்து சார்பட்டா படத்தில் டான்சிங் ரோசாய் தெறிக்க விட்ட சபீர் கல்லரக்கல் இப்படத்தில் கண்ணன் பாய் கதாபாத்திரத்தில் ஹீரோவிற்கு எதிரான நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Also Read: இதுவரை தேசிய விருதை தட்டி தூக்கிய 6 ஹீரோக்கள்.. மூன்று முறை வென்ற உலக நாயகன்

மேலும் ரித்திகா சிங் சிறு கதாபாத்திரத்தில் இடம்பெற்று குத்தாட்டம் போட்டிருப்பார். அதை தொடர்ந்து வடசென்னை படத்தில் இடம்பெற்ற சரண் சக்தி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கஞ்சா தொழிலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் கே ஜி எஃப் பாணியில் எடுக்கப்பட்டிருந்தாலும், மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இருப்பினும் துல்கர் சல்மானின் எதார்த்தமான நடிப்பு இப்படத்திற்கு சிறப்பம்சமாக பார்க்கப்பட்டாலும் சாக்லேட் பாய் முகத்திற்கு ஆக்சன் அவதாரம் செட் ஆகாமல் போதிய வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு மலையாள படத்தில் இத்தனை தமிழ் நடிகர்கள் நடித்தும் எதிர்பார்த்த சுவாரஸ்யம் இல்லாமல் இருந்து வருகிறது.

Also Read: 500 கோடி வசூலித்தாலும், அது சாராயம் வித்ததுக்கு சமம்.. ரஜினி, விஜய்யை கடுமையாக விமர்சித்த இயக்குனர்

Trending News