Vikram: சீயான் விக்ரமின் வீரதீர சூரன் படம் கடந்த மாதம் மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கடன் பிரச்சனை காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
மேலும் தீர்ப்பு வந்த பிறகு அன்று மாலை காட்சிகளில் இருந்து தான் வீரதீர சூரன் படம் திரையிடப்பட்டது. ஆகையால் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
விக்ரம் தொடர் தோல்விகள் கொடுத்து வந்த நிலையில் தங்கலான் படம் சற்று ஆறுதலாக அமைந்தது. ஆரம்பத்திலேயே சிக்கலை சந்தித்த வீரதீர சூரன் வசூலில் சூறை காற்றாய் சுழற்றியது.
7 நாட்களில் வீரதீர சூரன் பட வசூல்
அவ்வாறு ஏழு நாட்களில் இப்படம் 52 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் மீண்டும் சீயான் விக்ரம் ஃபாமுக்கு வந்திருக்கிறார்.
மேலும் படம் திரையரங்குகளில் இப்போதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் இன்னும் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஏப்ரல் பத்தாம் தேதி அஜித்தின் குட் பேட் அட்லி படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
அதுவரையில் தியேட்டரில் விக்ரமின் சூரன் ஆட்டம் தான். மேலும் வீரதீர சூரன் படத்தின் வெற்றியை தொடர்ந்த இந்த படத்தின் முதல் பாகம் மற்றும் மூன்றாம் பாகம் எடுக்கும் முடிவில் படக்குழு உள்ளதாக கூறப்படுகிறது.