ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

சூப்பர் ஸ்டார் பெயரை காப்பாற்றிய 7 இயக்குனர்கள்.. இக்கட்டான சூழ்நிலையில் கைகொடுத்த நெல்சன்

Super Star: தற்பொழுது எங்கு திரும்பினாலும், சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினி அவர்கள் தனக்கே உரிய பட்டமான சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்கவைக்க இக்கட்டான சூழ்நிலையில் மலை போல் நம்பி உள்ள பிரபலம் குறித்த தகவலை இங்கு காண்போம்.

தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினை பெற்று, ரஜினியை வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்திய பிரபலம் தான் இயக்குனர் கே பாலச்சந்தர். ஆரம்பத்தில் இவர் மேற்கொண்ட தோல்விகள் ஏராளம். அவ்வாறு புரட்டிப் போடப்பட்ட இவரின் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்க செய்தவரும் பாலச்சந்தர் தான்.

Also Read: தூக்கிட்டு வாங்க அந்த செல்லத்தை.. ஜெயிலரில் வாய்ப்பு வாங்கிய மாவீரன் பட நடிகர்

பாலச்சந்தர் படங்களில் அடுத்தடுத்து இவர் மேற்கொண்ட வெற்றியின் காரணமாக, தனக்கான அந்தஸ்தை பெற்றார். ஒரு சில படங்களில் தோல்வியை கண்டு வந்த இவருக்கு வெற்றி படங்களை கொடுத்து உதவியும் இருக்கிறார்.

இவர் மட்டுமல்லாது இயக்குனர்களான முத்துராமன், மகேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா, கே எஸ் ரவிக்குமார், பி. வாசு, ஷங்கர் ஆகியோர் ரஜினி தோல்வியில் இருக்கும் பொழுது கை கொடுத்து உதவி இருக்கிறார்கள். அவ்வாறு பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி, கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் படையப்பா ஆகியவை ரஜினியின் வெற்றிக்கு திருப்புமுனையாய் அமைந்தது.

Also Read: கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய நெல்சன்.. ஜெயிலர் படத்தில் இருக்கும் நிறை, குறைகள்

இவர்களின் இயக்கத்தில் படம் நடித்து வெற்றி காண விட்டால் ரஜினியின் நிலைமை மற்ற நடிகர்களை போல சாதாரணமாக மாறி இருந்திருக்கும். இவர்களின் படங்களில் மேற்கொண்ட வெற்றியைக் கொண்டே தனது சூப்பர் ஸ்டார் பட்டத்தில் இன்று வரை நிலைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் தற்பொழுது ஜெயிலர் படத்தை இயக்கி வரும் நெல்சனும் இருந்து வருகிறார். மக்கள் கொண்டாடும் விதமாய் கருத்துள்ள கதை அம்சம் கொண்டு தற்போது வெளிவந்திருக்கும் இப்படத்தின் விமர்சனம் ரஜினிக்கு வெற்றியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பை முன்வைத்து காத்திருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.

Also Read: ஜெயிலர் விமர்சனத்திற்கு தயாரான ப்ளூ சட்டை.. ஒத்த வரியில் கொடுத்த கமெண்ட், நெல்சா மண்ட பத்திரம்

- Advertisement -spot_img

Trending News