சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தளபதியின் லயன் அப்பில் இருந்த 7 படங்கள்.. அரசியலால் சினிமாவுக்கு போடும் முழுக்கு

Actor Vijay : நேற்றைய தினம் இணையத்தையே ஆட்கொண்டது தளபதி விஜய்யின் அரசியல் கட்சியின் அறிவிப்பு தான். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் புதிய கட்சி தொடங்கி இருக்கிறார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்துவரும் விஜய் அடுத்ததாக ஒரு படத்தில் மட்டுமே நடிக்க உள்ளார்.

தளபதி 69 உடன் விஜய்யின் சினிமா வாழ்க்கை நிறைவு பெற உள்ளது. அடுத்ததாக முழு நேர அரசியலில் விஜய் செயல்பட இருக்கிறார். விஜய் லைன் அப்பில் 7 படங்களில் நடிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. அந்த படங்கள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருந்தது. இந்த படத்தில் இரண்டாம் பாகம் கேட்டு ரசிகர்கள் நச்சரித்து வந்தனர். அடுத்ததாக பிகில் படத்தில் இடம்பெற்ற ராயப்பன் கதாபாத்திரத்தை முழு படமாக எடுக்கும் முடிவில் அட்லீ இருந்தார்.

Also Read : மக்கள் திலகம் எம்ஜிஆர் தொடங்கி தளபதி விஜய் வரை.. இதுவரை கட்சி ஆரம்பித்த 11 நடிகர்கள்

மேலும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகி வசூல் ரீதியாக நல்ல லாபம் பெற்ற லியோ படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருந்தது. அதேபோல் லோகேஷ், கமல் கூட்டணியில் உருவாக இருந்த விக்ரம் 2 படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அடுத்ததாக விஜய்யின் ஆஸ்தான இயக்குனர் அட்லீ ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியிருந்தார்.

விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து ஒரு படத்தில் கண்டிப்பாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது விஜய் அரசியலில் இறங்க உள்ளதால் அது சாத்தியமில்லாமல் போய் உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இவ்வாறு தளபதி ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்த படங்கள் உருவாகுவது மிகவும் கடினம் தான். இந்நிலையில் தளபதி 69 படத்தின் இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் விஜய்யின் சினிமா கேரியரில் கடைசி படமாக கருதப்படும் இந்த படத்தின் இயக்குனர் கண்டிப்பாக அதிர்ஷ்டசாலி தான்.

Also Read : ஸ்டாலின் Vs விஜய், உதய் Vs விஜய்.. குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டுமா தளபதியின் தமிழக வெற்றி கழகம்.?

Trending News