கமலஹாசன் சினிமாவில் பல சாதனைகள் செய்திருந்தாலும் இன்று வரை அவருக்கு இருக்கும் ஒரே ஏக்கம் ஆஸ்கர் விருது. இவரின் 7 படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது ஆனால் ஒருமுறை கூட எந்த படமும் வெல்லவில்லை என்பது உலகநாயகனுக்கு பெரிய வருத்தம்.
தேவர் மகன்: கமல் மற்றும் சிவாஜி கணேசன் இருவரும் நடிப்பில் 25 படத்தை ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. ஜாதி ரீதியாக ஒரு சமூகத்தினரை குறிப்பதால் கிடைக்காமல் போனது. இந்தப் படத்திற்கு ஆஸ்கர் விருது கட்டாயம் கிடைக்கும் என்று கமல் எதிர்பார்த்து மோசம் போனார்.
குருதிப்புனல்: அர்ஜுன் மற்றும் கமல் இருவரும் போலீஸ் அதிகாரியாக நடித்து கலக்கிய படம் குருதிப்புனல். நாசரின் வில்லத்தனம் இந்த படத்தில் மிகுந்த பாராட்டுகளை பெற்றது. இந்த படமும் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டு தோல்வியை சந்தித்தது.
நாயகன்: மணிரத்தினம் இயக்கத்தில் இமயம் தொட்ட படம். கமலுக்கு உலக நாயகன் ஆண்டவர் என்ற பெயருக்கு முன்னாடி நாயக்கர் ஐயா என்ற பெயரை பெற்று தந்த படம் நாயகன். கமல் வாழ்க்கையில் இந்தப் படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்தியன்: ஊழல், லஞ்சத்திற்கு எதிராக சங்கர் இயக்கிய இந்த படம் ஒரு பெரிய விழிப்புணர்வு படமாக அமைந்தது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு எதிராக பொங்கி எழும் இந்தியன் தாத்தாவாக கமல் நடிப்பில் உச்சத்தை காட்டிய இந்த படம் ஆஸ்கருக்கு போனது. இந்தப் படத்திற்கு அவார்டு கிடைக்கும் என பெரிதும் நம்பி இருந்தார் கமல்
ஹேராம்: இந்த படமும் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டதுமொத்தமாக ஐந்து தமிழ் படங்களும், இதுபோக ஹிந்தி படமாகிய சாகர் மற்றும் தெலுங்கு படம் சுவாதி முதயம் ஆகிய படங்களும் ஆஸ்கர் அவார்டுக்கு சென்றுள்ளது. ஒரு தென்னிந்திய நடிகரின் ஏழு படங்கள் ஆஸ்கருக்கு சென்றது கமலுக்கு மட்டும்தான்.
- அதிகமாக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகள்
- 70 வயதிலும் 3 சவாலான வேடங்களில் கமல்
- கமலிடம் மாட்டி முழிக்கும் மணிரத்தினம்