தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக வில்லன் நடிகர்களுக்கும் பெரும் பெயரும் புகழுமுண்டு. ஹீரோவை ஹீரோவாக காட்டும் வில்லன்கள் உண்மையில் சூப்பர் ஹீரோக்கள் தான் அப்படிப்பட்ட வில்லன்ளில் மறக்க முடியாத சிலரை இப்போது பட்டியலிட்டுள்ளோம்.
நம்பியார்: ஆரம்பகாலத்தில் துணைக்கதாப்பாத்திரங்களில் நடித்தாலும் மந்திரகுமாரி படம் இவரின் மாஸ் வில்லத்தனத்தை பரைசாற்றியது திரைசாட்டியது. இவரின் டயலாக் டெலிவரியும் முகத்தின் தோரணையும் வில்லனாக முயற்சிக்கும் இன்றைய நடிகர்கள் எல்லோரும் முயற்ச்சிப்பதுண்டு. வில்லத்தனத்தின் மாமேதை குறிப்பிட்ட காலம் வரை வில்லனாக நடித்த நம்பியாரை இரவின் விளிம்பில் காட்டும் காட்சிகள் பழைய பட ரசிகர்களுக்கு வரம்.
மன்சூர் அலிகான்: இப்போது திரை விமர்சனங்கள் தனிநபர் விமர்சனங்கள் என பல்வேறு விதங்களில் கலக்கி வருபவர் மன்சூர் அலிகான். இவரும் வில்லத்தனத்தின் மாஸ் நடிப்பை காட்டியவர். கேப்டன் பிரபாகரன் படத்தில் வீரபத்ரன் என்கிற கதாப்பாத்திரத்தில் மிரட்டி இருப்பார். அப்போதைய தேடப்படும் குற்றவாளி வீரப்பனை அடையாளப்படுத்தியதால் இவரின் நடிப்பிற்காகவே படம் வசூலை வாரியது.
ரகுவரன்: எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு நம்பியார் எனில் ரஜினி கமல் காலத்தின் ரசிகர்களுக்கு அசைக்க முடியாத பெயர் பெற்றவர் ரகுவரன். வளர்ந்த உருவமும் கடுமையான குரலும் இவர் வில்லத்தனத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும். ஆரம்பத்தில் பல்வேறு ரோல்களில் வந்த ரகுவரனுக்கு “புவிழி வாசலிலே” ஒரு திருப்பம். பாட்ஷா படத்தின் ஆண்டனியை யாராலும் அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. முதல்வன் படத்தில் வில்லாதி வில்னாக ரியாக்டிங்கில் பின்னினார். குறிப்பாக “என்ன சமாளிக்கவே முடியலைல” என்கிற டயலாக் இன்றும் சமூக வலைதளங்களில் கமாண்டுகளில் பதிவிடும் ஒன்று.
ஆனந்தராஜ்: நானும் ரவுடிதான் தில்லுக்கு துட்டு 2 படங்களில் காமெடியில் கலக்கும் நடிகர் தான் அன்றைய இளம் நடிகர்களுக்கு வில்லன். பாட்ஷாவிற்கு ஆண்டனி என்றால் மாணிக்கத்திற்கு இந்திரன் என தலைவரிடமே வில்லத்தனம் செய்தவர். விஜயகாந்த் சத்யராஜ் உட்பட பல நாயகர்களுக்கு வில்லனாக வலம் வந்தார்.
பிரகாஷ் ராஜ்: இன்றைய மாஸ் ஹீரோக்களுக்கு ஆரம்பகாலத்திலேயே வில்லனாக வலம் வந்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். ஆசை படத்தில் சுவலெட்சுமிக்கு ஆசைப்படும் அக்காவின் கனவரை அத்தனை எளிதில் மறந்திட முடியாது. கில்லியில் செல்லம் செல்லம் என்று திரிஷாவை திருமணம் செய்ய நினைக்கும் மதுரைமுத்துப்பாண்டி எப்போதும் நினைவில். சிங்கம் 1ல் தாம்பரத்தில் தட்டினால் பாரிஸ் பத்திக்கும் என்கிற டயலாக் மயில்வாகனத்தின் மாஸ் நடிப்புக்கு சிறு சான்று. அபியும் நானும் படத்தி் அன்பான அப்பாவாகிப்போனார்.
சத்யராஜ்: இப்போதைய திரைகளில் பல்வேறு மாறுபட்ட பாத்திரங்களில் நடிக்கும் சத்யராஜ் ஆரம்ப காலத்தில் வில்லனாக அவதரித்தவர். மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்ததை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. மோகன் நடிப்பில்100வது நாள் 24 மணி நேரம் படங்களின் தத்ரூபத்திற்கு உருவம் தந்திருப்பார் சத்யராஜ். அமைதிப்படையில் ஹீரோ வில்லன் என்கிற ரோலில் மிரட்டியிருப்பார்.
ராதாரவி: சத்யராஜ் மாறுபட்ட கோணங்களில் நடிக்க துவங்கிய தருணமே ராதாரவியின் வில்லன் ரோல் கனகச்சிதமாய் பொருத்தமாயிற்று. அண்ணாமலை படத்தி் இருக்கும் “கூட்டிக்கழித்து பார்” டயலாக் இன்று வரை பேசப்படும் ஒன்று.