சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

OTT-யை போட்டு தள்ள பக்கா ப்ளான் போட்ட முதலாளிகள்.. ஒரே நாளில் வெளிவர உள்ள 7 படங்கள்

தீபாவளி, பொங்கல் பண்டிகை என்றாலே பெரிய நடிகர்களின் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பார்கள். அந்த அளவுக்கு பண்டிகைகள் முழுவதும் திரையரங்குகள் ஹவுஸ்புல்லாக இருக்கும். கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு உத்தரவுப்படி திரையரங்குகளை மூடப்பட்டது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு 50 சதவீத இருகைகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டது.

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் திரையரங்குக்கு வர தயக்கம் காட்டினார்கள். திரையரங்குகளில் படம் வெளியிட்டாலும் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் முன்னணி நடிகர்களின் படம் ஒடிடி தளத்தில் வெளியானது. இதனால் மக்கள் வீட்டிலேயே படங்களை பார்க்க பழகிவிட்டார்கள்.

சூர்யாவின் ஜெய் பீம் படம் அமேசான் ஓடிடி வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனால் திரையரங்குகளில் நிலைமை என்னவாகும் என்று உரிமையாளர்கள் மிகவும் கவலைப்பட்ட நிலையில் அதைப் போக்கும் வகையில் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படம் தீபாவளியன்று திரையரங்குகள் வெளியானது.

சூப்பர் ஸ்டாரின் படம் என்பதால் திரையரங்கு முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதைத்தொடர்ந்து திரையரங்குகளில் பல நடிகர்களின் படம் வெளியானது. என்னதான் வீட்டிலிருந்து படம் பார்த்தாலும் திரையரங்கு சென்று பார்த்தால் தான் படம் முழுமை பெறும் என மீண்டும் மக்கள் திரையரங்குக்கு வர தொடங்கினார்கள்.

டிசம்பர் 3ம் தேதி திரையரங்குகளில் 7 படங்கள் வெளியாக உள்ளது. சாந்தனுவின் முருங்கைக் சிப்ஸ், அதர்வாவின் தள்ளி போகாதே, ஜிவி பிரகாஷின் பேச்சுலர் என இளம் நடிகர்களின் படம் வெளியாக உள்ளது. அதே நாளில் ப்ளூ சட்டை மாறனின் ஆன்ட்டி இந்தியன் படமும் திரையரங்கில் வெளியாக உள்ளது.

ஒரே நாளில் கிட்டத்தட்ட 7 படங்கள் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் காலங்களில் OTT தளத்தை ரசிகர்கள் மறந்து விடுவார்கள் என்பதே தியேட்டர் முதலாளிகளின் கனவாக தற்போது உள்ளது.

Trending News