80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த காமெடி நடிகர்கள் என்றால் அது கவுண்டமணி மற்றும் செந்தில் மட்டுமே. இவர்கள் இருவரது காமெடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த சமயத்தில் தமிழ் சினிமாவை இவர்கள் இருவரும் தங்கள் கைவசம் வைத்திருந்தனர். அந்த அளவிற்கு ஏராளமான படங்களில் இவர்கள் நடித்திருந்தனர். கவுண்டமணி மற்றும் செந்தில் இல்லாத படங்களே இல்லை.
இன்றுவரை காமெடி என்றால் அது கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி தான். இவர்களது காமெடிக்கு குழந்தைகளும் அடிமையாக உள்ளனர். அனைத்து காமெடி நடிகர்களும் ஒரு கட்டத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளனர். அந்த வகையில் நடிகர் கவுண்டமணி ஏற்கனவே ஹீரோவாக நடித்து விட்டார். தற்போது இந்த வரிசையில் நடிகர் செந்திலும் இணைய உள்ளார்.
காமெடி மற்றும் குணசித்திர வேடம் என கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடிகர் செந்தில் நடித்துள்ளார். தற்போது 70 வயதாகும் நிலையில் இவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் விதார்த் நடிப்பில் வெளியான ஒரு கிடாயின் கருணை மனு எனும் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பலரது பாராட்டுக்களைப் பெற்ற இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கும் புதிய படத்தில் தான் நடிகர் செந்தில் நாயகனாக நடிக்க உள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஆயுள் தண்டனை கைதியாக நடிகர் செந்தில் நடித்துள்ளதாகவும், ஆயுள் தண்டனை முடிந்து கிராமத்திற்கு திரும்பும் ஒரு கைதியின் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் செந்தில் முடித்துக் கொடுத்துள்ளார். டப்பிங்கை பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தற்போது ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிகர் செந்திலை திரையில் பார்க்க உள்ளதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் 70 வயதான நிலையிலும் நாயகனாக களமிறங்கும் நடிகர் செந்திலுக்கு ரசிகர்கள் பலரும் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படம் எப்போது திரைக்கு வரும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.