நடிகர் நாசர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக செய்யக்கூடியவர். அதாவது நாசர் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டவும் செய்திருக்கிறார், குணச்சித்திர கதாபாத்திரத்தில் ரசிகர்களை அழவும் வைத்துள்ளார். மேலும் தமிழ் மொழியைத் தாண்டி அனைத்து மொழிகளிலும் மிகவும் பரிச்சயமானவர் நாசர்.
இதனால் பான் இந்திய மொழி படங்களில் முதலில் நாசரை தான் படக்குழு தேர்வு செய்கின்றனர். அந்தளவுக்கு எந்த கதாபாத்திரம் என்றாலும் அது நாசர் நடித்தால் சரியாக இருக்கும் என இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தேர்வு செய்கின்றனர். ஆனால் 70களிலேயே நாசர் போன்ற ஒரு நடிகர் தமிழ் சினிமா இருந்துள்ளார்.
அந்தக்காலத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்த சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களுடனும் நடித்துள்ளார். ஆனால் எதிர்பார்த்த அளவு அவரால் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர் வேறு யாரும் இல்லை தேங்காய் சீனிவாசன் அவர்கள் தான்.
ரஜினி நடிப்பில் வெளியான தில்லுமுல்லு படமே போதும் தேங்காய் சீனிவாசனின் மொத்த நடிப்பையும் சொல்லும். குணச்சித்திரம், வில்லன், சூழ்ச்சிக்காரன் என எல்லா கதாபாத்திரத்திற்கும் தன்னை கனகச்சிதமாக பொருத்திக் கொள்ளக் கூடியவர்.
இவ்வாறு தேங்காய் சீனிவாசன் அவர்களுக்கு பல திறமைகள் இருந்தும் குணச்சித்திர நடிகர் என்ற முத்திரை குத்தியதால் அவரால் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போனது. தற்போது தமிழ் சினிமாவில் வெர்சடைல் நடிகராக நாசர் இருக்கிறார். ஆனால் அப்போதே தேங்காய் சீனிவாசன் அந்த இடத்தை பிடித்துவிட்டார்.
நடிப்பு சக்கரவர்த்தியாக இருந்த தேங்காய் சீனிவாசனை வளரக்கூடாது என்பதற்காக சிலர் இவ்வாறு குணச்சித்திர கதாபாத்திரத்துக்கு மட்டுமே இவர் பொருந்துவார் என முத்திரை குத்தியுள்ளனர். இது போன்ற திறமையான நடிகர்களை சிலரின் சூழ்ச்சியால் தமிழ்சினிமா இழந்துள்ளது.