செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

70களில் கிளாமர் டான்ஸ் குயீன்.. எம்ஜிஆர், சிவாஜிக்கு ஐட்டம் டான்ஸ் ஆடிய அந்த காலத்து சில்க்

அந்த காலத்தில் இருந்தே இப்போது வரை கிளாமர் என்றாலே ஒரு பெரிய மவுசு தான். அப்படி 80களில் கவர்ச்சியில் பெரிய மாஸாக இருந்த சில்க் ஸ்மிதா இப்பொழுது வரை கிளாமர் என்றாலே நமது ஞாபகத்துக்கு முதலில் வருபவர். இதே போல 70களில் காலகட்டத்திலும் கவர்ச்சிக்கென்றே சில நடிகைகள் இருந்தார்கள். அதில் ரசிகர்களை கவர்ந்த சில நடிகைகளும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஆரம்பத்தில் நல்ல கேரக்டர் பண்ணிய ஒரு நடிகை வாய்ப்புகள் குறையவே அந்த மாதிரி ஐட்டம் டான்ஸ் ஆடும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். பின்பு அவர் ஹீரோயின் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு முழு நேர கிளாமர் நாயகியாகவே மாறிப் போனார். அதற்கு அப்புறம் அவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.

Also read: கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தியது யார் தெரியுமா? அட இவரு போலீஸ் ஆச்சே.

அதன் மூலம் அவருக்கு எம்ஜிஆர், சிவாஜி படங்களில் ஒரு பாடலுக்கு ஆடுவது, கவர்ச்சி கதாபாத்திரம் என வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. இவ்வாறு தனது பாதையை மாற்றிக் கொண்டு ஐட்டம் டான்ஸ் ஆடி வந்தவர் சிஐடி சகுந்தலா. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாக ஆரம்பித்த இவர் ரசிகர்களால் கிளாமர் குயின் என்று அழைக்கப்படும் அளவுக்கு வளர்ந்தார்.

இந்த வளர்ச்சியை வைத்துக்கொண்டே ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் இதுவரை 600 படங்களுக்கும் மேலாக நடித்திருக்கிறார். இப்படி கவர்ச்சி கேரக்டர் மட்டுமல்லாமல் சில வில்லத்தனமான கதாபாத்திரங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

Also read: 70களில் கவர்ச்சியில் திணறடித்த 5 நடிகைகள்.. எம்ஜிஆர் உடன் மஞ்சுளா அடித்த அந்தரங்க லூட்டி

ஆனாலும் இவரை மக்கள் முன் அடையாளம் காட்டியது என்னவோ இந்த ஐட்டம் பாடல்கள் மட்டும் தான். அதன் காரணமாகவே தொடர்ந்து அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சில காலங்களுக்குப் பிறகு அம்மா வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படி சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த இவர் சின்னத்திரையையும் விட்டு வைக்கவில்லை. அதிலும் இவர் பல வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் கவர்ச்சி நடிகை என்பதுதான் இவருடைய அடையாளமாக இருக்கிறது. அந்த வகையில் அந்த காலத்து சில்க் ஸ்மிதா என்ற பெயர் இவருக்கு பக்காவாக பொருந்தி போகிறது.

Also read: ஒரே குடும்பத்தில் இத்தனை நடிகர்களா.. சிவாஜி குடுமபத்தையே மிஞ்சிய சூப்பர்ஸ்டார் குடும்பம்

Trending News