செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இந்த வருட தல தீபாவளி கொண்டாடும் 8 பிரபலங்கள்.. அலப்பறை செய்ய காத்து கிடக்கும் ரவீந்தர் ஜோடி

தீபாவளி பண்டிகை என்பது புதிதாக திருமணம் செய்திருக்கும் தம்பதியர்களுக்கு கொஞ்சம் ஸ்பெஷல் தான். அந்தவகையில் இந்த வருடம் திருமணம் செய்துகொண்ட சினிமா பிரபலங்கள் வரும் அக்டோபர் 24ஆம் தேதி அன்று கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை தல தீபாவளியாக கொண்டாட தயாராகி வருகின்றனர். அதிலும் ரவீந்தர்-மகாலட்சுமி ஜோடி ஓவர் அலப்பறை காட்டுவதற்காகவே காத்துக் கிடக்கின்றனர்.

ரன்பீர் கபூர்-ஆலியா பட்: பாலிவுட் நட்சத்திரமான ஆலியா பட் மட்டும் ரன்பீர் கபூர் தம்பதியர் இந்த வருடம் ஏப்ரல் 14-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு நவம்பரில் குழந்தை பிறக்கும் நிலையில், இந்த புது தம்பதியர் இந்த வருடம் தல தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

விக்னேஷ் சிவன்-நயன்தாரா: நயன்-விக்கி இருவரும் ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை வாடகைத்தாய் மூலம் பிறந்தது என சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலையை கிளப்பினர். இந்த ஜோடிக்கும் இந்த வருடம் தல தீபாவளி.

மகாலட்சுமி-ரவீந்தர்: இவர்கள் செய்து கொண்டதோ இரண்டாவது திருமணம் என்றாலும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டான ஜோடி என்றால் ரவீந்தர்-மகாலட்சுமி ஜோடிதான். ஏற்கனவே இவர்கள் சமூக வலைதளங்களில் பல பேட்டிகளை அளித்து ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில், தல தீபாவளியை இந்த வருடம் கொண்டாடி அலப்பறையை கூட்ட காத்திருக்கின்றனர்.

ஆதி-நிக்கி கல்ராணி: கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட இவர்கள் திருமணத்திற்கு பின் பாரிசுக்கு ஹனிமூன் சென்று வந்த நிலையில், இந்த ஜோடி தற்போது தல தீபாவளிக்காக தயாராகி வருகின்றனர்,

புகழ் – பென்ஸி: விஜய் டிவியில் குக் வித் கோமாளி, நிகழ்ச்சியின் மூலம் ஃபேமஸான புகழ், கடந்த மாதம் நீண்டநாள் காதலித்த பென்ஸி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தி முடித்த இந்த ஜோடி, தற்போது குஷியுடன் தல தீபாவளிக்கு தயாராகி வருகின்றனர்.

சித்து – ஸ்ரேயா: திருமணம் என்கிற சீரியலில் ரீல் ஜோடியாக நடித்தபோது காதலித்து பின்னர் ரியல் ஜோடி ஆனவர்கள் தான் சித்துவும், ஸ்ரேயாவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர் இவர்களும் இப்போதுதான் தல தீபாவளி கொண்டாட இருக்கின்றனர்

மதன் – ரேஷ்மா: ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில் நடித்தபோது காதலித்த மதனும் ரேஷ்மாவும் கடந்த் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களும் இந்த ஆண்டுதான் தலை தீபாவளி கொண்டாட உள்ளார்கள்.

ஆர்யன் – ஷபாபா: விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யனும், ஜீ தமிழின் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர் இவர்கள் இருவரும் இந்த ஆண்டு தான் தங்களது தல தீபாவளியை கொண்டாட இருக்கிறார்கள்.

இவ்வாறு இந்த 8 பிரபலங்களும் தங்களது தல தீபாவளியை தாறுமாறாக கொண்டாட காத்திருக்கின்றனர். இவர்கள் கொண்டாட்டத்தின்போது எடுக்கும் புகைப்படங்களையும் அவர்கள் அடிக்கும் லூட்டிகளையும் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

Trending News