திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

டாக்டர் பட்டமா.? கொடுங்க.. வடிவேலுவை போல போலியாக பல்லை காட்டி வந்து அசிங்கப்பட்ட 8 பிரபலங்கள்

ஒவ்வொரு துறையிலும் அர்ப்பணிப்போடும், தனித்தன்மையோடும் சிறந்து விளங்கும் பிரபலங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படும். அதேபோன்று சினிமாவிலும் உச்ச நட்சத்திரங்களாக ரசிகர்களை கவர்ந்தவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டு வருவது இயல்புதான்.

அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி, கமல் போன்ற பலரும் இந்த கௌரவத்தை பெற்றுள்ளார்கள். இது ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான். ஏனென்றால் நடிப்பில் இவர்கள் எந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பார்கள் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இப்போது டாக்டர் பட்டம் என்பது கேலிக்கூத்தாக மாறி வருகிறது.

Also read: வடிவேலுவின் போலி டாக்டர் பட்டம் விவகாரம்.. பதறிப் போய் மனித உரிமை கொடுத்த விளக்கம்

அதாவது சினிமா துறைக்கு வந்த பிறகு பல நடிகர்களும் தங்களை பெரிய சாதனை மனிதர்களாக நினைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அதை நன்றாக தெரிந்து கொண்ட சில கும்பல் டாக்டர் பட்டம் கொடுக்கிறோம் என்று அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டுகிறது. அதை அப்படியே நம்பும் அந்த பிரபலங்களும் என்னை ஏது என்று விசாரிக்காமல் டாக்டர் பட்டமா? கொடுங்க, வாங்கிக்கிறோம் என்று பல்லை காட்டிக் கொண்டு வந்து விடுகின்றனர்.

இப்படி போலி டாக்டர் பட்டம் வாங்கிக்கொண்டு எதையோ சாதித்தது போல் கெத்து காட்டி வரும் பிரபலங்களை பார்த்தால் வேடிக்கையாக தான் இருக்கிறது. அந்த வகையில் வடிவேலு, சேரன், டி இமான், ஈரோடு மகேஷ், இசையமைப்பாளர் தேவா, சாண்டி மாஸ்டர், யூடியூப் பிரபலம் கோபி சுதாகர் ஆகியோர் டாக்டர் பட்டத்தை வாங்கி இருக்கின்றனர்.

Also read: 19 வயது நடிகையை கட்டி அணைத்த வடிவேலு.. பெரிய மனுஷன் பண்ற வேலையா! முகம் சுளிக்க வைத்த புகைப்படம்

இவர்களை ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை அமைப்பு நன்றாக திட்டம் போட்டு ஏமாற்றி இருக்கிறது. அதை தற்போது தோலுரித்து காட்டும் வகையில் பல சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அதில் இந்த அமைப்பு கொடுத்த டாக்டர் பட்டம் போலியானது என்ற சர்ச்சை தான் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வடிவேலு வாங்கிய இந்த பட்டம் குறித்து பலரும் நக்கல் அடித்து வருகிறார்கள்.

மேலும் இது போன்ற பெருமைக்கு ஆசைப்பட்டு வரும் பிரபலங்களை பார்த்து ரசிகர்கள் வந்தோமா, நடித்தோமா என்று செல்லாமல் உங்களுக்கு இதெல்லாம் தேவையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். திரைக்கு முன்னால் ரசிகர்களை ஏமாற்றும் நடிகர்கள் பெருமைக்கு ஆசைப்பட்டு ஏமாந்து போய் இருக்கின்றனர். இப்படி திட்டம் போட்டு பிரபலங்களை ஏமாற்றி வரும் கும்பலை தனி படை அமைத்து தேடி வருகின்றனர். விரைவில் இதுபோன்ற அட்டகாசங்களுக்கு ஒரு முடிவு வந்தே தீர வேண்டும். அப்பொழுதுதான் டாக்டர் பட்டத்திற்கு உரிய புனிதம் கெடாமல் இருக்கும்.

Also read: படம் தான் ஊத்திக்கிச்சு, பட்டமும் போலியா.. வடிவேலுவை திருப்பி அடிக்கும் கர்மா

Trending News