வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கோலாகலமாக தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன் 8.. போட்டியாளர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய விஜய் டிவி

Bigg Boss Season 8: விஜய் டிவியின் டிஆர்பி எப்போது உச்சத்தில் இருக்கும் என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது தான். கடந்த ஏழு சீசன்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மிக விரைவில் எட்டாவது சீசனை தொடங்க இருக்கிறது. எப்போதுமே உலக நாயகன் கமலஹாசன் தான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

ஆனால் இப்போது ஆண்டவருக்கு பல கமிட்மெண்ட் இருப்பதால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். அக்டோபர் ஆறாம் தேதி மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் இந்நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.

அதற்கான போட்டியாளர்களை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு விஜய் டிவி தூக்கி உள்ளது. ஏற்கனவே ஊடகங்கள் மற்றும் பத்திரிகையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 8 பேர்களை பார்க்கலாம்.

பிக் பாஸ் சீசன் 8ல் கலந்து கொள்ளும் 8 போட்டியாளர்கள்

முதலாவதாக பப்லு பிரிதிவிராஜ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டு இவரது திருமணம் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. அதுவும் விஜய் டிவி ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட சீசன் நல்ல டிஆர்பியை பெற்றது.

இவரைத்தொடர்ந்து சின்னத்திரை நடிகையான பவித்ரா ஜனனி கலந்து கொள்ள இருக்கிறார். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை ஆகியவற்றில் நடித்த வரும் ரஞ்சித் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை பூனம் பாஜ்வா மற்றும் அமலா ஹாஜி ஆகியோரும் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளனர்.

இதைத்தொடர்ந்து சம்யுக்தா விஸ்வநாதன் பிக் பாஸ் வீட்டில் நுழைய உள்ளார். குக் வித் கோமாளி பிரபலம் குரேஷி மற்றும் நடிகை அன்ஷிகா ஆகியோரும் இந்த சீசனில் கலந்து கொள்கின்றனர். ஆகையால் பிக் பாஸ் சீசன் 8 களை கட்டப் போகிறது.

களைக்கட்டும் பிக் பாஸ் சீசன் 8

Trending News