செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிக்பாஸை மிரள விட்ட 8 சர்ச்சை போட்டியாளர்கள்.. ஆண்டவருக்கே தண்ணி காட்டிய பிரதீப்

Biggboss: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனாலேயே ஒவ்வொரு சீசனும் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதில் இந்த ஏழாவது சீசன் ரணகளத்திலும் ரணகளமாக இருக்கிறது.

அந்த வகையில் இதுவரை பிக்பாஸை மிரள விட்ட 8 சர்ச்சை போட்டியாளர்கள் யார் என்பதை பற்றி இங்கு காண்போம். இதில் முதலாவதாக இந்த சீசன் பிரதீப்பை சொல்லலாம். ஏனென்றால் ஆண்டவருக்கே தண்ணி காட்டிய பெருமை இவருக்கு உண்டு. விளக்கம் கேட்காமல் ரெட் கார்டு கொடுத்தார்கள் என்ற ஒரு காரணமே இதற்கு போதுமானது.

அதனாலயே கமல் கடந்த ஒரு வாரமாக சோசியல் மீடியாவில் பல கண்டனங்களுக்கு ஆளானார். இதை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அன்று இந்த பிரச்சனையை ஒரு வழியாக பேசி முற்றுப்புள்ளி வைத்தார். அடுத்ததாக வத்திக்குச்சி வனிதா ரசிகர்களின் அதீத வெறுப்பை சம்பாதித்தார். ஆணவத்துடன் இவர் பேசும் பேச்சும் நடவடிக்கையுமே இதற்கு முக்கிய காரணம்.

Also read: மாயாவுக்கு கட்டம் கட்டிய பூர்ணிமா.. இனிமேதான் ஆட்டமே ஆரம்பம்

அடுத்து சைக்கோ ரேஞ்சுக்கு நடந்து கொண்ட ஐஸ்வர்யா தத்தா தாடி பாலாஜி மீது குப்பையை கொட்டியது முதல் பிக்பாஸ் வீட்டில் இவர் செய்த அட்டூழியங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனாலும் இவர் இறுதி போட்டி வரை வந்து ஷாக் கொடுத்தார். இவருக்கு அடுத்ததாக சரவணன் ஒரு சர்ச்சைக்கு ஆளாகி இருந்தார்.

எப்போதோ செய்த ஒரு தவறு அவருக்கு எதிராக திரும்பியதில் திடீரென இவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இது பல கண்டனங்களுக்கு ஆளானது. அடுத்ததாக கடந்த சீசன் அசீமை சொல்லலாம். கொஞ்சம் கூட நாவடக்கம் இல்லாமல் கண்டபடி பேசுவதும் சண்டை போடுவதுமாக இருந்த இவர் பல வெறுப்புகளுக்கு ஆளானார்.

ஆனாலும் இவர் டைட்டிலை வென்றது இன்று வரை ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. அடுத்ததாக சேரன் மீது படுமோசமான புகார் அளித்த மீரா மிதுன் பெரும் சர்ச்சை போட்டியாளராக இருக்கிறார். ஆனால் இவர் கூறியது பச்சை பொய் என்பதை ஆண்டவர் குறும்படம் போட்டு நிரூபித்தார். இதற்கு அடுத்ததாக மிகப்பெரும் வெறுப்புக்கு ஆளான ஒரு நபர் தான் ஜூலி.

Also read: ஒரே பெட்டில் மாயா, பூர்ணிமா செய்த மட்டமான வேலை.. பிக் பாஸில் விளக்கு பிடிக்க வேற 70 கேமராவா?

இவர் சொன்ன ஒரு பொய் இப்போது வரை அவருக்கு பின்னடைவாக இருக்கிறது. அடுத்ததாக மதுமிதா தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதுவும் சில பல சர்ச்சைகளுக்கு ஆளானது. இவ்வாறாக இந்த எட்டு போட்டியாளர்களும் பிக்பாஸ் வரலாற்றில் மறக்க முடியாதவர்களாக உள்ளனர்.

Trending News