வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஒரே வாரத்தில் ஒய்ந்து போய் தட்டு தடுமாறும் ஜவான்.. 8 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் ரிப்போர்ட்

Jawan Collection Report: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து நம்ம ஊரு அட்லி இயக்கி இருக்கும் ஜவான் கடந்த 7ஆம் தேதி மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படம் முதல் நாளிலேயே மிகப்பெரும் வசூல் வேட்டை நடத்தியது.

அதிலேயே மிரண்டு போன பாலிவுட் திரையுலகம் அடுத்தடுத்த நாட்களில் வந்த கலெக்சனை பார்த்து ஆச்சரியப்பட்டது. அதன்படி ஜவான் 8வது நாளான நேற்று வரை 696.67 கோடியை வசூலித்து விட்டதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Also read: காப்பி அடித்தாலும் வசூலில் சோடை போகாத ஜவான்.. 2வது நாள் மொத்த வசூல் ரிப்போர்ட்

இது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டாலும் இனிவரும் நாட்களில் இதன் வசூல் அதிகரிக்குமா என்ற ஒரு சந்தேகமும் இருக்கிறது. ஏனென்றால் இன்றைய நாளை பொருத்தவரை படத்தின் கலெக்சன் கொஞ்சம் மந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது.

பொதுவாக வார நாட்களில் ஜவான் 30 முதல் 50 கோடி வரை வசூலித்து வந்தது. அதனாலேயே விரைவில் 1000 கோடியை இது தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது 700 கோடியை நெருங்குவதற்கே இப்படம் தட்டு தடுமாறி கொண்டிருக்கிறது.

Also read: ஜவான், லியோவால் பீதியில் 30 பட தயாரிப்பாளர்கள்.. மார்க் ஆண்டனி முதல் சந்திரமுகி 2 வரை தலை தப்புமா.?

இருப்பினும் வார இறுதி நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாளும் வருவதால் ஓரளவிற்கு வசூலை பெற்று விடலாம் என பட குழுவினர் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்களாம். மேலும் அட்லி பழக்க தோஷத்தில் பல படங்களின் கதையை மிக்ஸ் செய்து ஜவான் படத்தை கொடுத்திருக்கிறார்.

அதனாலேயே தமிழில் இப்படத்திற்கு எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை. இருந்தாலும் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வரவேற்பு இருப்பதால் 1000 கோடி பெற முடியாது என்றாலும் 900 கோடியை ஜவான் நெருங்கிவிடும் என்கிறது பாலிவுட் வட்டாரம்.

Also read: Jawan Movie Review- 4 வருட உழைப்பு, அட்லி-ஷாருக்கான் கூட்டணி ஜெயிக்குமா? மிரட்டி விட்ட ஜவான் பட முழு விமர்சனம்

Trending News