புதன்கிழமை, ஜனவரி 15, 2025

8 இயக்குனர்களுக்கு தோல்வி பயத்தை காட்டிய படங்கள்.. டாப் இயக்குனர்களுக்கு இந்த நிலைமையா!

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் பல நல்ல படங்களை கொடுத்து அவர்கள் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறார்கள். அவ்வாறு சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் ஆக உள்ள சில இயக்குனர்களின் படங்கள் நம்மை அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பிரபல இயக்குனர்களின் மொக்கை படங்களை பார்க்கலாம்.

லிங்குசாமி: தமிழ் சினிமாவில் ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி வெற்றி இயக்குனராக உள்ளவர் லிங்குசாமி. குடும்பப்பாங்கான கதைகளில் பட்டையைக்கிளப்பும் லிங்குசாமி டான் படங்களில் சொதப்பி விடுகிறார். அவ்வாறு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படம் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. அஞ்சான் படம் முழுக்க சண்டை காட்சிகள் ஆகவே இருந்தது. அஞ்சான் படத்தின் சுவாரஸ்யமற்ற கதையாக இருந்ததால் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

கௌதம் வாசுதேவ் மேனன்: தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்ற இயக்குனர்களில் ஒருவர் கௌதம்மேனன். இவர் மின்னலே, காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா என பல படைப்புகளை கொடுத்துள்ளார். ஆனால் கௌதம் மேனனிடம் இருந்து எதிர்பார்க்காத படம் தான் நடுநிசி நாய்கள். தன்னுடைய தந்தையின் செய்கையால் சிறுவயதிலேயே மனநோயாளியாக மாறி சமூகத்தில் நஞ்சை விதைக்கும் நச்சி பாம்பாக செயல்படுவதுதான் நடுநிசி நாய்கள்.

மிஸ்கின்: சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஸ்கின். அதன்பிறகு அஞ்சாதே, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஆனால் இவர் படங்களில் சற்று வித்தியாசமான சாயலில் வெளியான படம் முகமூடி. இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா நடித்திருந்தார். படத்தில் புரியாத விஷயங்கள் நிறைய இடம் பெற்றிருந்தது. மிஸ்கின் ரசிகர்களை ஏமாற்றிய படம் முகமூடி.

செல்வராகவன்: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். செல்வராகவன் சூர்யா நடிப்பில் அரசியல் படமாக என் ஜி கே படத்தை இயக்கியிருந்தார். ஆனால் இப்படம் பல படங்களின் கலவையான விமர்சனமாக இருந்தது. இப்படத்தில் பல காட்சிகளில் முதல் சீன் மட்டுமே நினைவில் இருக்கும்படி என்ஜிகே படம் இருந்தது.

ராஜேஷ்: சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட நகைச்சுவை கலந்த படங்களை இயக்கியவர் எம் ராஜேஷ். இவருடைய இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , நயன்தாரா, ராதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் மிஸ்டர் லோக்கல். மோதலில் ஆரம்பித்த சிவகார்த்திகேயன், நயன்தாரா சந்திப்பு காதலில் முடிகிறதா என்பதே மிஸ்டர் லோக்கல். இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

வெங்கட் பிரபு: தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் வெங்கட்பிரபு. சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெங்கட்பிரபு முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை அடைந்தார். இதைத்தொடர்ந்து சரோஜா, மங்காத்தா என பல வெற்றிப்படங்களை தந்துள்ளார். அண்மையில் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. வெங்கட் பிரபு சொதப்பிய படம் என்றால் அது பிரியாணி. கார்த்திக், ஹன்சிகா நடிப்பில் வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது.

கேவி ஆனந்த்: அயன், கோ போன்ற அற்புத படங்களை கொடுத்த கேவி ஆனந்த் காப்பான் படத்தை எடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றி இருந்தார். சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் படத்தில் கார்ப்பரேட்களின் பார்வையில் விவசாயத்தையும், ஒரு விவசாயியின் பார்வையில் கார்ப்பரேட்களையும் காட்டி இருந்தார்கள். இப்படத்தில் இடம்பெற்ற பயங்கரவாதம் கதைக்களம் ரசிகர்களை சோர்வடைய செய்தது.

சுந்தர் சி: தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. இவருடைய படங்கள் வெளியாகிறது என்றாலே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும். ஆனால் இவருடைய இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2019 வெளியான ஆக்சன் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் ஆக்சன் படத்தில் முழுவதும் சண்டைக்காட்சிகளே இடம்பெற்ற ரசிகர்களை எரிச்சலடைய செய்தது.

Trending News