ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பொங்கலுக்கு மோதப் போகும் 8 புது படங்கள்.. டிஆர்பிக்காக அடித்துக் கொள்ளும் நான்கு சேனல்கள்

Telecast 8 Movies on Channels for Pongal: ஒரு பண்டிகை வருகிறது என்றால் எந்த அளவிற்கு சந்தோஷம் இருக்குமோ அதற்கு இணையாக புத்தம் புது படங்களை குடும்பத்துடன் சேர்ந்து வீட்டில் இருந்தபடியே பார்ப்பது இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்கும். அந்த வகையில் நான்கு சேனல்கள் பொங்கலை குறி வைத்து டிஆர்பி-யின் முதலிடத்தை பிடிப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு வருகிறது.

வருகிற அனைத்துப் படங்களுமே புத்தம் புது படங்களாக இருக்கிறது. இதில் சன் டிவி எப்போதுமே தன்னுடைய கெத்தை விடக்கூடாது என்பதில் அதிகமாக மெனக்கிடு செய்யும். அதனால் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து இன்னும் கொஞ்சம் கூட மவுசு குறையாத படம் ஆன லியோ படத்தை இறக்கப் போகிறார்கள். அடுத்தபடியாக ரஜினி கூப்பிட்டு பாராட்டிய லாரன்ஸ் படமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள்.

இதற்கு அடுத்தபடியாக விஜய் டிவி சேனல் எப்போதுமே சன் டிவி உடன் போட்டி போட்டுக் கொண்டு மோதி வரும். அதனால் மக்களை அதிகளவில் கவர்ந்து சமூகத்துக்கு ஒரு நல்ல மெசேஜை கொடுத்த சித்தார்த்தன் நடிப்பில் வெளிவந்த சித்தா படத்தை போட போகிறார்கள். அடுத்த படியாக காமெடியில் தற்போது ஒன் மேன் ஆர்மியாக கலக்கிக் கொண்டிருக்கும் யோகி பாபு படமான லக்கி மேன் படமும் போடுகிறார்கள்.

Also read: தம்பிக்கு பாசத்தைக் காட்டி தூபம் போடும் குணசேகரன்.. சக்தியை போல் ரெமோவாக மாறிவரும் கதிர்

இவர்களை தொடர்ந்து ஜீ தமிழ் சேனலில் இரண்டு புத்தம் புது படங்களை பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள். அதில் பல வருடமாக வெற்றிக்கு போராடி வந்த விஷாலின் மார்க் ஆண்டனி படமும், நயன்தாரா பாலிவுட்டில் முதன்முதலாக ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வெற்றி பெற்ற படமான ஜவான் படமும் ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து அருள்நிதி நடிப்பில் வெளிவந்த கழுவேத்தி மூர்க்கன் படமும், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த இறைவன் படத்தையும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள். இப்படி ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டு புத்தம்புது படங்களை ஒளிபரப்பு செய்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிப்பதற்காக மோதிக் கொண்டு வருகிறார்கள்.

Also read: பாக்யாவை மட்டம் தட்டின கோபியின் நிலைமை பரிதாபம்.. ஒரு முடிவுக்கு வந்த பாக்கியலட்சுமி சீரியல்

Trending News