திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இந்த வார நாமினேஷனில் சிக்கிய 8 பேர்.. பிக்பாஸ் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப் போகும் கோமாளி

Biggboss 7 Nomination: பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடு பிடித்து வரும் நிலையில் யார் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. கடந்த வாரம் பிராவோ, அக்ஷயா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.

அதைத்தொடர்ந்து விஜய் வர்மா, அனன்யா வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தனர். அவர்கள் கூறிய விஷயங்களை கேட்டதிலிருந்து மாயா, பூர்ணிமாவுக்குள் அலாரம் அடிக்க ஆரம்பித்துவிட்டது அதனாலயே மாயா இப்போது தன்னுடைய கூட்டாளி பூர்ணிமாவை நாமினேட் செய்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.

அந்த வகையில் இந்த வாரம் தினேஷ், சரவண விக்ரம், ஜோவிகா, மணி, கூல் சுரேஷ், பூர்ணிமா, அனன்யா, விசித்ரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர். இதில் கடந்த வாரம் தப்பித்த டைட்டில் வின்னர் சரவணன் விக்ரம் இந்த வாரம் சிக்கி இருக்கிறார். இதற்காகத்தான் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.

Also read: உல்லாசமா இருக்க பசங்கள ஏமாத்தி காச ஆட்டைய போடுவா.. பூர்ணிமாவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய தோழி

ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் எதற்கு இருக்கிறோம் என்று தெரியாமலேயே இருக்கும் ஒரே நபர் இவர்தான். சில போட்டியாளர்களாவது அவ்வப்போது தங்கள் இருப்பை காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் விக்ரம் பெரும்பாலான நேரத்தை பெண்களுடன் தான் செலவிடுகிறார்.

இவ்வாறு தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாத இவரை மிக்சர் பார்ட்டி என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல் நள்ளிரவில் மிக்சர் சாப்பிட்டு இவர் செய்த காமெடியும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது. இதனாலேயே இப்போது பிக்பாஸ் அவரை வீட்டை விட்டு துரத்த முடிவு செய்திருக்கிறார்.

இதற்கு மேலும் எங்களிடம் மிக்சர் ஸ்டாக் இல்லை நீ போயிட்டு வா ராசா என இந்த வாரம் பிக்பாஸ் குழு இவரை வழியனுப்ப இருக்கிறது. அதன்படி இன்று ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றுள்ளதில் விக்ரமுக்கு தான் அதிக ஓட்டுக்கள் கிடைத்திருக்கிறது. அப்போதே அவருக்கு தெரிந்திருக்கும் அடுத்த பாயாசம் எனக்குத் தான் என்று. அந்த வகையில் இந்த வார இறுதி அனைவரும் எதிர்பார்த்தது போல் தான் இருக்கும்.

Also read: பூர்ணிமாவை பலி கிடாவாக ஆக்கிய மாயா.. நம்பிக்கை துரோகத்தின் மொத்த உருவமான சூனியக்காரி

Trending News