புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இந்த ஆண்டு வரிசை கட்டி நிற்கும் 8 இரண்டாம் பாக படங்கள்.. எதிர்பார்ப்பை எகிறச் செய்த பொன்னியின் செல்வன் 2

பொதுவாக ஹாலிவுட்டில் தான் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி வருவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இப்போது தமிழ் சினிமாவிலும் இரண்டாம் பாக படங்கள் அதிகமாக உருவாகி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் ரிலீசாக 8 இரண்டாம் பாக படங்கள் காத்திருக்கிறது. அந்தப் படங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

தலைநகரம் 2 : இயக்குனர் சுந்தர் சி கதாநாயகனாக நடித்த தலைநகரம் 2006 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சுராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தைப் பெற்றது.

சார்பட்டா பரம்பரை 2 : பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, ஜான் கொக்கன், பசுபதி போன்ற பல பிரபலங்கள் நடித்து வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படம் கொரோனா காலத்தில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்போது சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : பத்து தல படத்தில் குத்தாட்டம் போட்ட சாயிஷாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?. ஆடவிட்டு வேடிக்கை பார்த்த ஆர்யா

விடுதலை 2 : வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வரும் விடுதலை படம் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு ஆக ரசிகர்கள் பல வருடங்கள் காத்திருந்தாலும் இரண்டு பாகங்களாக வர இருக்கிறது.

ஜிகர்தண்டா 2 : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த் நடிப்பில் மிரள விட்ட படம் ஜிகர்தண்டா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த ஆண்டு ரிலீஸுகாக ஜிகர்தண்டா 2 உருவாகி வருகிறது.

பிச்சைக்காரன் 2 : சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். இப்போது விஜய் ஆண்டனி இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். மேலும் இதன் படப்பிடிப்பிலும் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் விரைவில் பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியாக உள்ளது.

Also Read : கெட்ட வார்த்தை கற்றுக் கொடுக்கும் விஜய் ஆண்டனி.. கல்லா கட்ட இப்படி ஒரு விளம்பரமா?

சந்திரமுகி 2 : பி வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி அதிக நாள் வெற்றிகரமாக ஓடிய படம் சந்திரமுகி. இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு போன்ற பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். சந்திரமுகி 2 படம் விரைவில் திரைக்க வர இருக்கிறது.

இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். இப்போது இதே கூட்டணியில் லைக்கா தயாரிப்பில் இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பல வருடங்களாக எடுக்கப்பட்டு வந்த நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளது.

பொன்னியின் செல்வன் 2 : மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் கடந்த ஆண்டு ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் 2 படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Also Read : அண்ணனும் கைவிட்டாச்சு, நம்பிய படமும் கோவிந்தா.. பொன்னியின் செல்வன் 2 தான் நம்ம அஸ்திவாரம்

Trending News