ஒரு காலத்தில் சினிமாவிற்கு இணையாக டிவி நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வந்தன. படத்தைக்கூட தியேட்டரில் சென்று போய் தான் பார்க்க வேண்டும். ஆனால் டிவி நிகழ்ச்சி அப்படி கிடையாது.அதனால் டிவி நிகழ்ச்சிகளுக்கு 80 காலகட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது.
அப்போதெல்லாம் டிவியில் நிகழ்ச்சி பார்ப்பதற்கென்றே ஒரு சில கூட்டங்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் அதுமட்டுமில்லாமல் அப்போது அதிக அளவில் படங்களை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாதத்தால் ஒரு சில நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு மட்டுமே ஏராளமான ரசிகர்கள் காத்திருப்பார்கள்.
அப்படி 80 காலத்தில் மிகவும் பிரபலமாகயிருந்த நிகழ்ச்சிகளை தற்போது பார்ப்போம்.
பெப்சி உங்கள் சாய்ஸ். 1994ஆம் ஆண்டு ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி அன்றைய காலத்தில் பல கோடி ரசிகர்களால் பார்க்கப்பட்டு பிரபலமாகயிருந்தது. கிட்டத்தட்ட 18 வருடம் கழித்தும் இந்த நிகழ்ச்சியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
லலிதாவின் பாட்டுக்கு பாட்டு. தொடர்ந்து 16 வருடம் சன் டிவியில் நடத்தப்பட்ட ஒரே ஷோ லலிதாவின் பாட்டுக்கு பாட்டு தான். அப்போது சன் டிவியிலும் மற்றும் ரேடியோவிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகயிருந்த அப்துல் ஹமீது தமிழ் உச்சரிப்பு பலகோடி ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. இந்த சோ ஹிந்தியிலும் அந்தாகி சரி என்று பெயரில் ஒளிபரப்பட்டது.
மீண்டும் மீண்டும் சிரிப்பு. மீண்டும் மீண்டும் சிரிப்பு என்ற நிகழ்ச்சி சுரேஷ் சக்கரவர்த்தி இயக்கியிருந்தார். இந்நிகழ்ச்சியில் வெண்ணிற ஆடை மூர்த்தி அசாத்திய திறமை மூலம் ஒரு கலக்கு கலக்கியிருப்பார். இந்த நிகழ்ச்சி 16 வருடங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
காபி வித் அனு அண்ட் காபி வித் டிடி. காபி வித் டிடி நிகழ்ச்சியை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கியிருந்தார் இந்த நிகழ்ச்சி அப்போது பிரபலமாகயிருந்தது.
அரட்டை அரங்கம். அரட்டை அரங்கம் நிகழ்ச்சி 1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரட்டை அரங்கம் நிகழ்ச்சிக்கு ஏராளமான குடும்ப ரசிகர்கள் உள்ளனர்.
சப்தஸ்வரங்கள். ஏ வி ரமணன் தொகுத்து வழங்கி ரசிகர்களிடம் பெயர்பெற்ற நிகழ்ச்சிதான் சப்தஸ்வரங்கள். 1996 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை பிரபலமாகயிருந்த ஒரே நிகழ்ச்சி சப்தஸ்வரங்கள்.
நீங்கள் கேட்ட பாடல். நீங்கள் கேட்டால் பாடலை விஜய் சாரதி தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சியும் அன்றைய காலத்தில் பிரபலமாகயிருந்தது.
டாப் 10 மூவிஸ். சன் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் பிரபலமாகயிருந்த ஒரே நிகழ்ச்சி டாப் டென் மூவிஸ். புது படங்கள் வரவால் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகயிருந்தது.
இளமை புதுமை. இளமை புதுமை நிகழ்ச்சியை ஸ்வர்ணமால்யா மற்றும் அர்ச்சனா தொகுத்து வழங்கி அன்றைய காலத்தில் பிரபலமாகயிருந்தது
காமெடி டைம். காமெடி டைம் நிகழ்ச்சி சிட்டிபாபு மற்றும் அர்ச்சனா தொகுத்து வழங்கியிருந்தனர். இதுவும் அன்றைய காலத்தில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி. சிட்டிபாபுவின் காமெடி பேச்சு இந்த நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தது.
திரைவிமர்சனம். திரை விமர்சனத்தை ரத்னம் தொகுத்து வழங்கியிருப்பார். இவரது அசாத்திய பஞ்ச் மற்றும் படத்தின் விமர்சனத்தை சுவாரசியமாக சொல்லியதால் அன்றைய காலத்தில் அதிக ரசிகர்கள் பார்க்கப்பட்டு திரை விமர்சனம் பிரபலமாகயிருந்தது.