ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கமல் ரஜினிக்காக அடித்துக் கொள்ளும் சந்தானம்.. 80ஸ் பில்டப் அலப்பறையான டீசர்

80s Buildup Teaser: நடிகர் சந்தானம் நடித்த 80ஸ் பில்டப் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சந்தானத்திற்கு டிடி ரிட்டன்ஸ் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் தியேட்டரில் வெற்றி பெற்றதோடு, ஓடிடியிலும் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது. 80ஸ் பில்டப் படம் இதை விட பெரிய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது எல்லாம் ஒரு படத்தின் டீசரை வைத்தே, அது வெற்றிப்படமா அல்லது தோல்வி படமா என கணித்து விடுகிறார்கள். அந்த வரிசையில், 80ஸ் பில்டப் படத்தின் டீசரை பார்த்தே சந்தானத்திற்கு மற்றும் ஒரு வெற்றி படம் என கமெண்ட் செய்து வருகிறார்கள். ஸ்டூடியோ கிரீன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் கல்யாண் இயக்கி இருக்கிறார்.

டீசர் எப்படி இருக்கு?

எங்கிருந்தோ வந்த கமலஹாசன் உலக நாயகனா? என்ற வசனத்துடன் இந்த டீசர் ஆரம்பிக்கிறது. சந்தானம் தீவிர கமலஹாசன் ரசிகன் ஆகவும் அவருடைய தாத்தாவாக வரும் ஆர் சுந்தர்ராஜன் ரஜினிகாந்தின் ரசிகனாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவருக்குள்ளே நடக்கும் கமல், ரஜினி போராட்டம் தான் இந்த 80ஸ் பில்டப் படத்தின் கதைக்களமாக இருக்கப் போகிறது.

Also Read:சந்தானம் பாணியில் களம் இறங்கிய சதீஷ்.. சுந்தர் சி-யை மிஞ்சும் காஞ்சூரிங் கண்ணப்பன் ட்ரெய்லர்

புதிதாக ரிலீசாகி இருக்கும் கமலஹாசனின் படத்தை பார்ப்பதற்கு சந்தானம் ஆர்வமாக இருக்கும் நேரத்தில் அவருடைய தாத்தா ஆர் சுந்தர்ராஜன் இறந்து விடுகிறார். அந்த சோகத்திலும், நான் கமலஹாசனின் படத்தை பார்க்க கூடாது என்று தான் இந்த கிழவன் சூசைட் பண்ணிக்கிட்டான் என சந்தானம் சொல்கிறார். அந்த சாவு வீட்டிலேயே ஹீரோயினையும் சந்திக்கிறார்.

தாத்தாவின் இறுதிச் சடங்கு முடிவதற்குள் ஹீரோயினை காதலிக்க வைக்கிறேன் என நண்பர்களிடம் சவால் விடுகிறார் சந்தானம். சமீப காலமாக, ஆனந்தராஜ் இல்லாமல் சந்தானம் படம் இல்லை என்றாகி விட்டது. 80ஸ் பில்டப் படத்தின் டீசரில் மஞ்சள் நிற புடவையை கட்டிக்கொண்டு பெண் வேடத்தில் ஆனந்தராஜ் அறிமுகமாகும் போதே சிரிப்பு வந்து விடுகிறது.

ஒரு நிமிடம் 49 வினாடிகள் ஓடும் இந்த டீசரில் காட்சிக்கு காட்சி சிரிப்பை வரவழைத்து எதிர்பார்ப்பை எகிற விட்டுவிட்டார் இயக்குனர். மேலும் இந்த படத்தில் மறைந்த நடிகர்கள் மனோபாலா மற்றும் மயில்சாமியும் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க 80ஸ் கதைகளத்தை கொண்டு உருவாகி இருக்கிறதுஇந்த படம் வரும் 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Trending News