சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ரேகாவின் முகத்தில் சுட சுட ரசத்தை ஊற்றிய நடிகர்.. 80-களில் நடந்த மறக்க முடியாத சம்பவம்

80 காலகட்டத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களின் அமோக வரவேற்புடன் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்திருக்கிறது. அந்த திரைப்படங்களில் நடித்த ராதா, அம்பிகா, ராதிகா போன்ற நடிகைகள் அனைவரும் இன்றும் ரசிகர்களிடம் பிரபலமாக இருக்கின்றனர்.

அப்படி மிகவும் பிரபலமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா. இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தில் ஜெனிஃபர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ரேகா.

இந்த படத்திற்கு பிறகு அவர் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அப்படி ரசிகர்களால் இன்றும் மறக்க முடியாத ஒரு திரைப்படமாக இருந்தது கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான புரியாத புதிர் என்ற திரைப்படம்.

இந்தப் படம் நடிகர் ரகுவரன் மற்றும் ரேகா இருவருக்கும் திரை வாழ்வில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இதில் ரகுவரன் தன் மனைவியின் மீது சந்தேகப்படும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் ஒரு காட்சியில் ரகுவரன் அவருக்கு மனைவியாக நடிக்கும் ரேகாவின் மீது ரசத்தை ஊற்றுவது போல் இருக்கும்.

அந்த காட்சி எடுக்கும்பொழுது ரசம் மிகவும் சூடாக இருந்தது தெரியாமல் ரகுவரன், ரேகாவின் முகத்தில் ஊற்றி விட்டாராம். இதனால் ரேகா வலியில் அலறி துடித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு ரகுவரன் ரேகா விடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அதன்பிறகு ரேகா, ராமராஜன், பாண்டியராஜன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். அதில் பாண்டியராஜன், ரேகாவை விட உயரம் கம்மியாக இருந்த காரணத்தால் ரேகா, பாண்டியராஜன் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க ஒரு வித்தியாசமான முயற்சியை படக்குழு கையாண்டுள்ளது.

அதாவது பாண்டியராஜனுக்கு அருகில் தொடர்ச்சியாக ஒரு அடிக்கு குழி வெட்டி அதில் அவரை நடக்க வைத்து படம் எடுப்பார்கள் என்று ரேகா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டதாகவும் அதன் பிறகு அண்ணாமலை திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததாகவும் கூறியுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ரேகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அதனை தொடர்ந்து பல சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தற்போது கலந்து கொண்டு வருகிறார்.

Trending News