வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

புருஷனால் நடிகைக்கு பிடித்த பைத்தியம்.. விபரீதமான முடிவு எடுத்த 80ஸ் கனவுக்கன்னி

80 காலகட்ட தமிழ் சினிமாவில் தன்னுடைய அழகாலும், துள்ளல் நடிப்பாலும் ரசிகர்களை கிறங்கடித்தவர் தான் அந்த பூனை கண்ணழகி. ஆளை மயக்கும் பார்வையும், வசீகர சிரிப்பும் இவரை முன்னணி நடிகையாக மாற்றியது. இப்படி ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த அந்த நடிகை சில வருடங்களுக்குப் பிறகு சினிமாவை விட்டே காணாமல் போனார்.

தற்போது இந்த நடிகை எங்கு இருக்கிறார் என்று கூட பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. சொல்லப்போனால் இப்படி ஒரு ஹீரோயின் இருந்ததையே தமிழ் சினிமா மறந்து விட்டது. காலப்போக்கில் புது நடிகைகளின் வரவால் சினிமாவை விட்டு ஒதுங்கிய நடிகை ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் செட்டிலானார்.

Also read: போன் போட்டு படுக்கையில் அட்ஜஸ்ட் பண்ண சொன்ன இயக்குனர்.. கூலாக சொன்ன பதிலால் அதிர்ச்சி

கணவர், குழந்தை என்று நன்றாக சென்று கொண்டிருந்த அவருடைய திருமண வாழ்வில் திடீரென பல விபரீதங்கள் ஏற்பட்டது. கணவருடன், நடிகைக்கு அடிக்கடி ஏதாவது ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட ஆரம்பித்து இருக்கிறது. இது ஒரு கட்டத்தில் பயங்கர வாக்குவாதமாக மாறி இருவரும் பிரியும் நிலைக்கும் வந்துள்ளது.

இனிமேல் கணவருடன் இணைந்து வாழ முடியாது என்று நினைத்த நடிகை விவாகரத்து வாங்கிக் கொண்டு பிரிந்து விட்டார். ஆனாலும் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் நடிகை அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார். இதனால் எங்கே பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு சென்று விடுவோமோ என்று பயந்த நடிகை ஆன்மீகம் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பி இருக்கிறார்.

Also read: விவாகரத்துக்கு பிறகும் கணவரை நினைத்து ஏங்கும் நடிகை.. இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்

தனக்கு மன அமைதி கிடைக்க வேண்டும் என்று மதம் மாறிய நடிகை தற்போது மத போதகராகவே மாறிவிட்டாராம். அவரை தற்போது மத போதனை தொடர்பான கூட்டங்களில் அதிகமாக பார்க்க முடிகிறதாம். தன்னைப் போன்று மன அழுத்தத்தில் இருக்கும் நபர்களுக்கு நடிகை மன அமைதிக்கான அறிவுரையை கூறி வருகிறாராம். இதன் மூலம் அவர் வாழ்க்கையில் நிம்மதியாக இருப்பதாகவும் கூறுகிறார்.

Also read: கிசுகிசுவால் கேரியரை தொலைத்த அக்ரகாரத்து நடிகை.. பல வருடம் கழித்து வெளிச்சத்திற்கு வந்த உண்மை

Trending News