திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜய் சேதுபதி படத்தின் மூலம் இயக்குனராக ரீ-என்ட்ரி கொடுக்கும் 80ஸ் டாப் ஹீரோ.. பெண்களுக்கு பிடித்தவராச்சே!

80களில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த பிரபல நடிகர் ஒருவர் விஜய்சேதுபதி படத்தின் மூலம் இயக்குனராக ரீ என்ட்ரி கொடுக்க ஆசைப்படுவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக எளிதில் அணுகக்கூடிய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. முன்னணி இயக்குனர்கள் படங்களில் மட்டும்தான் நடிப்பேன் என எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் கதை நன்றாக இருந்தால் புதுமுக இயக்குனர்களுக்கு கூட வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் ஹீரோவையும் தாண்டி குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் வேடங்களிலும் சமீபகாலமாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் விஜய் சேதுபதி, தற்போது கைவசம் கிட்டத்தட்ட 10 முதல் 15 படங்கள் வைத்துக்கொண்டு நிற்கக்கூட நேரமில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது விஜய்சேதுபதி எப்படி கைவசம் நிறைய படங்கள் வைத்து நடித்துக்கொண்டிருக்கிறாரோ அதேபோல் எண்பதுகளில் கைவசம் நிறைய படங்கள் வைத்து நடித்துக்கொண்டிருந்த முன்னணி நடிகர் தான் ராமராஜன்.

பெண்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தும் நடிகராக வலம் வந்த ராமராஜன் அரசியலில் ஈடுபட்ட பிறகு சினிமாவில் மார்க்கெட் இழந்தார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் ஏற்கனவே 5 படங்கள் இயக்கியவர் ராமராஜன்.

ramarajan-vijaysethupathy
ramarajan-vijaysethupathy

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதிக்காக ஒரு கதையை எழுதி வைத்திருப்பதாகவும், விரைவில் அவரை சந்தித்து கதை சொல்லி படம் இயக்குவதற்கான வேலைகளை ஆரம்பிப்பேன் எனவும் பேட்டி கொடுத்துள்ளார். கடைசியாக ராமராஜன் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு மேதை என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Trending News