வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பொண்டாட்டியை வைத்து கல்லா கட்ட போகும் விக்னேஷ்.. நயன் பிறந்தநாளுக்கு ரணகளமாக வெளிவந்த 81 பட அப்டேட்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 38 வது பிறந்தநாளை கணவன் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடுகிறார். ஒரு பெண் ஆளுமையாக தமிழ் சினிமாவையே நயன்தாரா ஆட்டிப்படைத்து வருகிறார். இன்று அவரது பிறந்த நாள் என்பதால் நயன்தாரா படத்தை குறித்து நிறைய அப்டேட்டுகள் வெளியானது.

அதாவது நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் டீசர் வெளியாகி இருந்தது. இந்த படம் டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. நயன்தாராவின் 81 ஆவது படத்தின் அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதாவது எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, காக்கி சட்டை போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கம் படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார்.

Also Read : டிஆர்பிக்காக நயன்தாராவை வம்பிழுக்கும் விஜய் டிவி.. இதே வேலையா தான் இருப்பாங்களோ!

இப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் நயன்தாரா யானையின் முகத்தில் கை வைத்திருப்பது போல போஸ்டர் வெளியாகியுள்ளது. ஆகையால் யானையை மையமாக வைத்து கதை நகரும் என தெரிகிறது.

இந்த படத்தை விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளார். இதனை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். நயன்தாராவின் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் பொண்டாட்டியை வைத்து கல்லா கட்ட விக்னேஷ் சிவன் திட்டம் தீட்டியுள்ளார்.

Also Read : நம்பர் ஒன் அது எனக்கு மட்டும்தான், பழைய ஃபார்முக்கு வந்த நயன்தாரா.. அடுத்தடுத்து ரிலீஸாக உள்ள 6 படங்கள்

மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்போதே நயன்தாராவுக்கு 6,7 படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. இந்த வருடம் அவரது படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு போகவில்லை என்றாலும் டிசம்பர் மாதத்தில் இருந்து நயன்தாராவின் படங்கள் வரிசையாக வெளியாக உள்ளது.

முதல்முறையாக பாலிவூட்டில் ஜவான் படத்தின் மூலம் நயன்தாரா கால் பதித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. திருமணத்திற்கு பிறகும் நயன்தாராவுக்கு இப்படி பட வாய்ப்பு குவிந்து வருகிறது. எப்போதுமே நம்பர் ஒன் இடம் நயன்தாராவுக்கு மட்டும் தான் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Also Read : நயன்தாரா இடத்தை கைபற்றும் ஹீரோயின்.. 2 நடிகைகளையும் பின்னுக்கு தள்ளிய மூன்றாவது நாயகி!

Trending News