Bigg Boss Season 8: விஜய் டிவியில் பிரபல தொடரான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர்கள் இப்போது இணையத்தில் உலாவி வருகிறது. கடந்த சில பிக் பாஸ் சீசன் கள் எதிர்பார்த்த அளவு போகவில்லை.
இதைத்தொடர்ந்து இந்த முறையாவது சர்ச்சையான போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து சுவாரசியமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது பிக் பாஸ் சீசன் 8இல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் என்று அடிப்படையில் பெயர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற சந்தேகத்தை உண்டாக்கியுள்ளது.
கடந்த முறையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பப்லு ப்ரித்விராஜ் கலந்து கொள்வார் என்ற கூறப்பட்டு வந்தது. ஆனால் அவர் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வரும் கிரண் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 9 போட்டியாளர்கள்
மேலும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமான அமலா ஷாஜி தமிழ் பிக் பாஸ் சீசன் 8 ல் கலந்து கொள்ள உள்ளார். நடிகை சோனியா அகர்வால், பாடகி கல்பனா போன்றோரும் இந்த சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
எப்போதுமே காதல் போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது வழக்கமாக இருக்கும் நிலையில் டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது காதலியும் கலந்து கொள்ள உள்ளார்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற வரும் ஷாலினி ஜோத டிடிஎஃப் வாசன் காதலி ஆவார்.
மேலும் ரோபோ சங்கர் அல்லது அவரது மகள் இந்திரஜா என இவர்களுள் ஒருவர் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது. கடைசியாக பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் பிக் பாஸ் சீசன் 8இல் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த போட்டியாளர்கள் லிஸ்ட்டை பார்த்தால் ஓடாத கப்பலுக்கு ஒன்பது மாலுமி என்பது போல் இந்த முறையும் பிக் பாஸ் சுவாரசியமாக இருக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
டிஆர்பியில் பெடலெடுக்கும் விஜய் டிவி
- கவின் இடத்தை பிடிக்க வரும் விஜய் டிவி ஹீரோ
- சிங்கபெண்ணே சீரியலை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவியின் ஆட்டநாயகன்
- CWC 5-ல் ஓவர் ஆட்டம் போடும் புகழ், செம கடுப்பில் கோமாளிகள்.. என்ன தான் நடக்குது விஜய் டிவியில்