இளம் வயதிலேயே உயிரைவிட்ட 9 கிரிக்கெட் வீரர்கள் அதுவும் எப்படி இறந்தார்கள் என்பதை தற்போது வரிசையாக பார்க்கலாம். வாழ்க்கையில் இப்படி விதி விளையாடுமா என்பது போன்ற அவர்களது மரணம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம்.
ஹன்சி கிரொஞ்சே: தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிகரமான கேப்டன். ஒரு சிறந்த ஆல்ரவுண்டர். 2012ஆம் ஆண்டு விமான விபத்தில் மரணம் அடைந்தார். இவர் தன்னுடைய 32வது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
பென் ஹோலியேக்: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டர், பென் ஹோலியேக் மற்றும் ஆடம் ஹோலியேக் சகோதரர்கள். இருவரும் இங்கிலாந்து அணிக்காக ஆடினார்கள் இதில் பென் ஹோலியேக், 2002ஆம் ஆண்டு தன்னுடைய 24ஆம் வயதில் கார் ஆக்சிடெண்ட்டில் மரணமடைந்தார்.
மால்கம் மார்ஷல்: மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒரு லெஜன்ட் பிளேயர் 1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புற்றுநோயால் இவர் இவ்வுலகத்தை விட்டு பிரிந்தார்.
ரோனகோ மார்ட்டன்: தன்னுடைய காரை ஒரு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான இவர் 2012ஆம் ஆண்டு 33 வயதில் மரணம் அடைந்தார். மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் . அணிக்காக பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
ராமன் லம்பா: இந்திய அணியின் விளையாட்டு வீரர். இவர் பில்டிங் நிற்கும் போது தன்னுடைய நெற்றிப்பொட்டில் பந்து தாக்கியதால் 1998-ஆம் ஆண்டு மைதானத்திலேயே இறந்தார்.
மஞ்சுரல் இஸ்லாம் ராணா: வங்கதேச அணியை சேர்ந்த இவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமடைந்தார். இவர் 2007 ஆம் ஆண்டு 22 வயதில் இவ்வுலகத்தை விட்டு பிரிந்தார்.
டாம் மய்னர்ட்: இவர் இங்கிலாந்து அணியின் வீரர். டாம் ம்ய்னர்ட் 2012ஆம் ஆண்டு தன்னுடைய 23ஆம் வயதில் மின்சார ரயிலில் அடிபட்டு மரணம் அடைந்தார்.
டார்யன் ரண்டால்: தென்ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் டார்யன். இவர் ஃபுல் சார்ட் எனப்படும் பவுன்சர் பந்தை அடிக்கும்போது பந்து தன்னுடைய தலையில் பட்டு மரணம் அடைந்தார். தன்னுடைய 32 வயதில் மரணம் அடைந்தார்.
பில் ஹக்ஸ்: ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பில். இவர் பவுன்சர் பந்து தன்னுடைய தலையில் தாக்கி கோமா நிலைக்கு சென்று மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் மைக்கேல் கிளார்க்கின் நெருங்கிய நண்பர். 2014ஆம் ஆண்டு தன்னுடைய 27 வயதில் மரணம் அடைந்தார்.