புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பொங்கலுக்கு போட்டி போட்டு கல்லாகட்ட வரும் 9 படங்கள்.. சிவகார்த்திகேயனை பதம் பார்க்க வரும் ரஜினி

Pongal release 9 Movies: பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்கள் ஏதாவது பண்டிகை நாளை ஒட்டி தான் திரையரங்குகளில் ரிலீசுக்கு வரும். காரணம் அன்றைக்கு குடும்பத்துடன் சேர்ந்து நேரத்தை செலவிடுவதற்காக அனைவரும் தியேட்டர்களுக்கு போவார்கள். அத்துடன் விடுமுறை நாட்கள் அன்று படங்களை ரிலீஸ் செய்தால் வசூல் அளவில் கல்லாகட்ட முடியும் என்பதால் தான்.

அதிலும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர்ந்து 3 நாட்கள் லீவு வருவதால் பெரிய லாபத்தை பார்த்து விடலாம் என்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு டாப் நடிகர்களின் படங்கள் ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. அப்படி என்னென்ன படங்கள் வருகிறது என்று பார்க்கலாம். அந்த வகையில் பல வருட காலமாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படம் ஏலியன்ஸ் கதையை மையமாக வைத்து இயக்குனர் ராம்குமார் எடுத்திருக்கிறார்.

Also read: அட்லிக்கு ஒரு டார்லிங்னா, நெல்சனுக்கு ஒரு செல்லாகுட்டி.. கடுப்பில் இருக்கும் சிவகார்த்திகேயன்

அடுத்ததாக இவருடன் போட்டி போடுவதற்கு ரஜினியும் களமிறங்கி இருக்கிறார். அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மொஹைதீன் பாய் கேரக்டரில் நடித்த ரஜினியின் லால் சலாம் படமும் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது. அடுத்ததாக பேய்களை வைத்து சீரியஸாக படங்களை எடுத்து வரும் சுந்தர் சி யின் அரண்மனை- 4 படமும் போட்டி போட தயாராக வருகிறது.

இதனைத் தொடர்ந்து அக்கட தேசத்து படங்களும் சங்கராந்தியை முன்னிட்டு வசூலில் கல்லா கட்டுவதற்காக போட்டி போட்டு வருகிறது. அதில் மகேஷ் பாபு நடிப்பில் குண்டூர் காரம் தெலுங்கில் ரிலீஸ் ஆகப்போகிறது. அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவின் 13 வது படம் கிட்டத்தட்ட 80% படப்பிடிப்பு முடிந்த நிலையில் சங்கராந்தி அன்று வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Also read: 2வது முறையும் அவருடன் பாடும் வாய்ப்பை இழந்த ரஜினிகாந்த்.. ஒத்திகை பார்க்கும் பொழுது ஏற்பட்ட சங்கடம்

அடுத்ததாக ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள ஈகிள் திரைப்படம் சங்கராந்தியை டார்கெட் செய்து அன்றைக்கு ரிலீஸ் செய்ய அனைத்து வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்து வெங்கடேஷ் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சைந்தவ் படமும் பொங்கல் தினத்தை குறி வைத்து வருகிறது.

இதனை தொடர்ந்து நாகார்ஜுனா நடிப்பில் உருவாகியுள்ள நா சாமி ரங்கா என்ற படம் மற்றும் தேஜா சஜா நடிப்பில் உருவாகியுள்ள ஹனுமன் படமும் சங்கராதியை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீசுக்கு வர இருக்கிறது. ஆக மொத்தத்தில் விடுமுறை நாள் அன்று வசூலை வாரிக் குவிக்க கிட்டத்தட்ட 9 படங்கள் தயாராக இருக்கிறது.

Also read: சுந்தர் சி, லாரன்ஸ் கூட ஜோடி போட்டு சோலியை முடித்த 5 நடிகைகள்.. ஆடையை குறைத்தும் வாய்ப்பு இல்லாத பரிதாபம்

Trending News