புதன்கிழமை, மார்ச் 12, 2025

சிவகார்த்திகேயன் மிஸ் பண்ணிய 9 படங்கள்.. சந்தானம் செய்த சூழ்ச்சியால் கமுக்கமாக விலகிய SK

9 films that Sivakarthikeyan missed: ஒரு காலத்தில் சாதாரண தொகுப்பாளராக இருந்து இன்று தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகியாக சிவகார்த்திகேயன் அவதாரம் எடுத்திருக்கிறார். சின்னத்திரையில் ஆரம்பித்த அவருடைய பயணம் வெள்ளித்திரையில் கொடிகட்டி பறக்கிறது முக்கிய காரணம் வெற்றியோ தோல்வியோ நானே முடிவு பண்ணும் வரை என்னை யாராலும் தடுக்க முடியாது என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு படத்திலும் வெற்றிக்கொடுத்து வளர்ந்து வருகிறார்.

அந்த வகையில் அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். விஜய்க்கு எப்படி துப்பாக்கி படம் மாபெரும் மாஸாக வெற்றி கொடுத்ததோ, அதே மாதிரி சிவகார்த்திகேயனுக்கும் மதராசி ஒரு தரமான சம்பவத்தை ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறது. இதனைத் தொடர்ந்து சுதா கொங்காரு இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் சிவகார்த்திகேயன் 25வது படமாக நடித்து வருகிறார்.

இதற்கு இடையில் சிவகார்த்திகேயன் வெள்ளிதிரையில் நுழைந்ததற்குப் பிறகு மிஸ் பண்ணிய 9 படத்தின் விவரங்கள் வெளிவந்திருக்கிறது. அந்த படங்களை பற்றி தற்போது ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.

வழக்கு எண் 18/9: இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு ஸ்ரீ நடித்த வழக்கு எண் 18/9 விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. ஆனால் இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் சிவகார்த்திகேயன். சினிமாவிற்குள் நுழைந்த புதுசில் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அந்த நேரத்தில் மெரினா, 3 மற்றும் மனம் கொத்தி பறவை படங்களில் பிஸியாக இருந்ததால் இந்த படத்தை தவற விட்டார்.

பாண்டியநாடு: இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த பாண்டியநாடு படத்திலும் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு கமிட்டாய் இருந்தார். ஆனால் அப்பொழுது இந்த படத்திற்கு தயாரிப்பாளர் முதலில் கிடைக்காததால் கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முழு கவனத்தையும் செலுத்தி பாண்டியநாடு படத்தை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார்.

காத்து வாக்குல ரெண்டு காதல்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் காத்து வாக்குல இரண்டு காதல் படம் வெளிவந்தது. இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் இப்படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆகி இருந்தவர்கள் சிவகார்த்திகேயன் த்ரிஷா மற்றும் நயன்தாரா. அதன் பிறகு டான் மற்றும் பிரின்ஸ் என்ற படங்களில் பிஸியாக இருந்ததால் இதற்கு கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டு SK இப்படத்தில் இருந்து வெளியேறி விட்டார்.

ராஜா ராணி: அட்லி இயக்குனராக அறிமுகமான ராஜா ராணி 2013 ஆம் ஆண்டு ஜெய் ஆர்யா நடிப்பில் வெளியானது. ஆனால் இதில் முதலில் ஜெய் கேரக்டருக்கு சிவா நடிப்பதற்கு சம்மதம் கொடுத்திருந்தார். ஆனால் காமெடிக்கு இந்த படத்தில் சந்தானம் தான் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கண்டிஷன் போட்டிருந்தார். அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்தால் நான் காமெடியனாக நடிக்க முடியாது என்று சந்தானம் சொல்லியதால் சில குளறுபடிகள் ஏற்பட்டது. அதனால் SK சைலண்டாக இப்படத்தில் இருந்து விலகி விட்டார்.

கடைக்குட்டி சிங்கம்: பாண்டியராஜ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு கடைக்குட்டி சிங்கம் ஒரு குடும்ப படமாக வெளிவந்தது. ஆனால் இதில் முதலில் பாண்டியராஜ் அவருடைய நண்பராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு தான் கூப்பிட்டு இருந்தார். ஆனால் சிவகார்த்திகேயன் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இந்த படத்தை தவற விட்டுவிட்டார். இருந்த போதிலும் அடுத்த ஆண்டு பாண்டியராஜன் இயக்கத்தில் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்த மாபெரும் வெற்றியை கண்டார்.

டாடா: 2023 ஆம் ஆண்டு கவின் நடிப்பில் கணேஷ் பாபு இயக்கத்தில் வெளிவந்த டாடா மாபெரும் ஹிட் படமாக வெற்றி பெற்றது. ஆனால் இதில் கவின் கேரக்டரில் சிவகார்த்திகேயன் தான் நடிப்பதற்கு பேச்சு வார்த்தைகள் ஏற்பட்டது. ஆனால் சிவகார்த்திகேயன் இந்த கேரக்டர் எனக்கு செட்டாகாது என்று சொல்லி விலகி விட்டார்.

சித்தா: அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த சித்தா படம் அனைவரையும் கலங்க வைத்து ஒரு உண்மை சம்பவத்தை உரைக்க சொல்லும் விதமாக கதை இருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவருக்கு தான் கதை கூறப்பட்டது. ஆனால் கதையை கேட்ட பிறகு ஏனோ SK நிராகரித்து விட்டார்.

சூரரைப் போற்று: சுதா கொங்காரு இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஓடிடி-யில் வெளியான சூரரைப் போற்று சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. இதில் சூர்யா கேரக்டருக்கு முதலில் சிவா நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் சில காரணங்களாக மிஸ் பண்ணி விட்டார். ஆனாலும் அந்த வாய்ப்பை மறுபடியும் ஏற்படுத்தும் விதமாக தற்போது பராசக்தி என்ற படத்தின் மூலம் கூட்டணி அமைத்து விட்டார்கள்.

இந்தியன் 2: சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த இந்தியன் 2 எதிர்பார்க்காத அளவிற்கு தோல்வியடைந்து விட்டது. ஆனாலும் முதலில் சித்தார்த் கேரக்டரில் சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருந்தார். அதன் பிறகு ஏனோ சில காரணங்களால் அந்த வாய்ப்பு கைநழுவி போய்விட்டது. இதன் மூலம் சிவகார்த்திகேயன் எஸ்கேப் ஆகிவிட்டார் என்றே சொல்லலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு இப்படம் மக்களிடம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

Trending News