செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஒரே சமயத்தில் 9 படத்தில் கமிட்டான தனுஷ்.. முன்னணி இயக்குனர்களின் மொத்த லிஸ்ட்

ஒரு சாதாரண நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய தனுஷ் தற்போது ஹாலிவுட் சினிமா வரை சென்றிருப்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. அதுமட்டுமல்ல கோலிவுட்டில் நடிகர் விஜய் சேதுபதி தான் எப்போதும் கைவசம் அதிக படங்களை வைத்திருக்கும் நடிகராக இருப்பார். ஆனால் தற்போது தனுஷ் அவரையே ஓவர் டேக் செய்து விட்டார்.

தற்போது நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் ஹிந்தியில் வெளியான அட்ராங்கி ரே படம் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

இது தவிர தனுஷ் நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகின்றன. அனேகமாக அடுத்தாண்டு தொடக்கம் முதல் இறுதி வரை மாதம் ஒரு படம் என தனுஷ் ரிலீஸ் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவிற்கு கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன.

தற்போது தனுஷ் நடிப்பில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் தனுஷை இயக்கும் மற்றும் இயக்க உள்ள இயக்குனர்கள் குறித்த பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி நடிகர் தனுஷ், கார்த்திக் நரேன், ரூஸோ பிரதர்ஸ், செல்வராகவன், வெங்கி அட்லுரி, சேகர் கமுலா, ராம்குமார், வெற்றி மாறன், மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன் என கிட்டத்தட்ட 9 இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார். அனேகமாக அடுத்தாண்டு இந்த படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் இந்த இயக்குனர்கள் அனைவருமே டாப் இயக்குனர்களாக வலம் வருபவர்கள். எனவே நிச்சயம் நடிகர் தனுஷுக்கு இந்த படங்கள் அனைத்தும் நல்ல பெயரை பெற்று தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Trending News