திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

9 ஆண்டுகால நட்பை முறித்துக் கொண்ட பா.ரஞ்சித்.? காரணம் கேட்டு திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் பா.ரஞ்சித். இதனை தொடர்ந்து மெட்ராஸ், காலா, கபாலி மற்றும் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரி குவித்தது.

மெட்ராஸ் முதல் சார்பட்டா பரம்பரை படம் வரை சீரியசான கதையை இயக்கி வந்த ரஞ்சித் தற்போது நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் நடிகை துஷாரா விஜயனை வைத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற முழுநீள காதல் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ஒரு சோகமான செய்தி என்னவென்றால் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவில்லையாம். அவருக்கு பதிலாக இசைஞானி இளையராஜா தான் இசையமைக்கிறாராம். இதில் என்ன ஆச்சரியம் என்று தானே கேட்கிறீர்கள். காரணம் உள்ளது. ஏனென்றால் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி படம் தொடங்கி சார்பட்டா பரம்பரை படம் வரை அனைத்து படங்களுக்குமே இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான் இசை அமைத்துள்ளார்.

ஆனால் தற்போது இவர்களின் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் மகள் தீ குரலில் வெளியான என்ஜாய் என்சாமி ஆல்பம் பாடல் மாபெரும் வெற்றி பெற்றது. இவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக Rolling Stone magazine அட்டைப்படத்தில் இவர்களின் புகைப்படம் இடம் பெற்றது. ஆனால் பாடகரும், பாடலாசிரியருமான அறிவின் ஃபோட்டோ மற்றும் பெயர் இடம் பெறவில்லை.

அதற்கு மாற்றாக சந்தோஷ் நாராயணனின் மகள் தீ மற்றும் மற்றொரு பாடகரின் போட்டோக்கள் மட்டுமே இடம்பெற்றது. இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவானது. ஜாதி காரணமாகவே பாடகர் அறிவின் பெயர் இடம்பெறவில்லை என இயக்குனர் ரஞ்சித் வன்மையாக கண்டித்து குரல் கொடுத்தார். இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் பாடகர் அறிவுக்கு ஆதரவாக சந்தோஷ் நாராயணன் குரல் கொடுக்கவில்லையாம். இதனால் ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

santhosh-narayanan-cinemapettai
santhosh-narayanan-cinemapettai

இதன் காரணமாகவே தனது புதிய படத்திற்கு இசைஞானி இளையராஜாவை ரஞ்சித் இசையமைக்க வைத்துள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் மற்றொரு தரப்பினர் ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் இடையே கருத்து வேறுபாடு ஏதும் இல்லை. நட்சத்திரம் நகர்கிறது படத்தில் புதிய கூட்டணி அமைத்தால் நன்றாக இருக்கும் என ரஞ்சித் விரும்பியதால் தான் இளையராஜா உடன் கூட்டணி அமைத்துள்ளதாக கூறுகின்றனர்.

Trending News