சமீப நாட்களாக கமலை தலையில் தொப்பியுடன் தான் பார்க்க முடிகிறது. அதற்கு காரணம் தக்லைப் படத்தில் அவருடைய கெட்டப் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். அந்த படத்தில் கமல் சற்று வித்தியாசமான சிகை அலங்கார தோற்றத்தில் வருகிறாராம்.
செப்டம்பர் மாதத்தில் தக்லைப் படத்தின் சூட்டிங் முடிவு பெறுகிறது. அந்த படம் முடிந்த கையோடு கமல் 90 நாட்கள் நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்கிறார். பிக் பாஸ் அடுத்த கட்ட சீசனை கூட அவர் ஒத்தி வைத்து விட்டார்.
தொடர்ந்து படங்களை கமிட் செய்த கமல், நான் அதை எப்படியாவது கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என அமெரிக்கா செல்லவிருக்கிறார். எந்த ஒரு டெக்னாலஜி புதிதாக வந்தாலும் கமல் அதை ஒரு கை பார்த்து விடுவார். இப்பொழுதுபுதிய டெக்னாலஜி ஒன்றை கற்றுக் கொள்ள 90 நாட்கள் காலேஜ் செல்லவிருக்கிறார்.
90 நாட்கள் காலேஜ் போகும் உலகநாயகன்
தற்போது சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஏ ஐ டெக்னாலஜியை கற்றுக்கொள்ள தான் கமல் மூன்று மாதம் அமெரிக்கா செல்ல இருக்கிறார். தற்சமயம் தமிழ் சினிமாவில் அந்த டெக்னாலஜி மொத்தத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறது.
கோட் படத்தில் மறைந்த விஜயகாந்தை இந்த டெக்னாலஜி மூலம் திரையில் மீண்டும் கொண்டு வருகிறார்கள். உலகநாயகன் கமலுக்கு அந்த டெக்னாலஜி மீது மிகுந்த நாட்டம் ஏற்பட்டுள்ளது. எப்படியாவது அதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா செல்ல உள்ளார். அடுத்து நடிக்க போகும் அன்பறிவு படத்தில் இந்த டெக்னாலஜியை பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.